ஒரே வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த 2 காதல் - யார் அந்த ஜோடி புறாக்கள் தெரியுமா?

First Published | Nov 21, 2024, 12:13 PM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் புதிதாக இரண்டு காதல் ஜோடிகள் உருவாகி இருக்கின்றன. அது யார்... யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bigg Boss Tamil season 8

பிக் பாஸ் நிகழ்ச்சி சண்டைகளும், சச்சரவுகளும் நிறைந்ததாக இருந்தாலும் அதில் காதலுக்கும் பஞ்சமிருக்காது. பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை நடந்து முடிந்த அத்தனை சீசன்களிலும் ஏதேனும் ஒரு காதல் ஜோடி இருக்கும். அந்த வகையில் முதல் சீசனில் டைட்டில் வின்னரான ஆரவ்வை நடிகை ஓவியா உருகி உருகி காதலித்தார். ஆனால் கடைசியில் ஓவியாவின் இந்த ஒரு தலைக் காதல் கைகூடாமல் போய்விட்டது. இதையடுத்து இரண்டாவது சீசனில் நடிகர் மகத்தை துரத்தி துரத்தி காதலித்தார் யாஷிகா. அதுவும் கைகூடவில்லை.

Bigg Boss Tamil season 8 contestants

இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது சீசனில் கவின் - லாஸ்லியா இருவரும் சின்சியராக காதலித்தனர். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். பின்னர் 4-வது சீசனில் பாலாஜி முருகதாஸும், ஷிவானியும் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். அதேபோல் ஐந்தாவது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அமீர், நடிகை பாவனியை ஒரு தலைபட்சமாக காதலித்தார். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பாவனி அமீரின் காதலை ஏற்றுக்கொண்டதால் தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

இதையும் படியுங்கள்... 3 நொடி இல்ல 37 நோடிகள்; நயன்தாரா மேல இருந்த மரியாதையே போச்சு! ரசிகர்கள் அதிருப்தி!

Tap to resize

Bigg Boss Tamil

அடுத்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் நடிகை ரச்சிதாவை ராபர்ட் மாஸ்டர் துரத்தி துரத்தி காதலித்தார். ஆனால் அதற்கு ரச்சிதா நோ சொல்லிவிட்டார். கடைசியாக நடந்து முடிந்த 7-வது சீசனில் ஒரு காதல் ஜோடியே பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றது. அவர்கள் வேறுயாருமில்லை, மணி - ரவீனா தான். நிகழ்ச்சியின் போது பூர்ணிமாவுக்கு விஷ்ணு மீது காதல் ஏற்பட்டது. பின்னர் சில நாட்களிலேயே இருவரும் சண்டைபோட்டு பிரிந்தனர்.

Tharshika, VJ Vishal

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனிலும் ஒரே வாரத்தில் இரண்டு காதல் ஜோடிகள் உருவாகி உள்ளன. அதில் ஒன்று விஷால் - தர்ஷிகா ஜோடி. இவர்கள் இருவரும் கடந்த வாரம் நடைபெற்ற ஸ்கூல் டாஸ்க்கில் காதலர்களாக நடித்தனர். அப்போது தனக்கு விஷால் மீது ஒரு ஈர்ப்பு வந்ததாக கூறிய தர்ஷிகா, விஷாலிடமே அதை ஓப்பனாக சொல்லி, இருவரும் தற்போது ஜோடிப் புறாக்களாக பிக் பாஸ் வீட்டில் வலம் வருகின்றனர்.

Raanav Pavithra

அதேபோல் இந்த சீசனில் ஓடிக்கொண்டிருக்கும் மற்றொரு லவ் டிராக் ராணவ் - பவித்ரா ஜோடியின் காதல் கதை தான். இந்த காதலும் கடந்த வாரம் நடந்த ஸ்கூல் டாஸ்கின் போது தான் ஆரம்பமானது. இதில் ராணவ் தான் பவித்ராவை துரத்தி துரத்தி காதலித்து வருகிறார். ஆனால் பவித்ராவுக்கு ராணவ் மீது எந்தவித லவ்வும் இல்லை என அவரே ஓப்பனாக சொல்லிவிட்டார். நேற்று முன்தினம் ராணவ் கொடுத்த பூவை கோபத்தில் தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டார் பவித்ரா. இந்த இரண்டு காதல் ஜோடிகளால் பிக்பாஸ் எந்தளவுக்கு சூடுபிடிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... ரூ.25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் வீடு; பல ஆடம்பர ஸ்டுடியோக்கள்! ராஜாவாக வாழும் ஏ.ஆர். ரஹ்மான்!

Latest Videos

click me!