Priyanka Chopra Childhood Photos
பீகார் மாநிலத்தில் பிறந்து, உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்தவர் தான் நடிகையும் - உலக அழகியமான பிரியங்கா சோப்ரா, இவருடைய சிறு வயது புகைப்படங்களின் தொகுப்பு இதோ.
Priyanka Chopra Birth Place
பிரியங்கா சோப்ரா 1982 ஆம் ஆண்டு, ஜூலை 18-ஆம் தேதி இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த அசோக் மற்றும் மது சோப்ரா ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவருடைய தந்தை ஒரு பஞ்சாபி. இவருடைய தாய் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
மீண்டும் தனுஷை சீண்டி பார்ப்பது போல் நயன்தாரா வெளியிட்ட 3 பக்க அறிக்கை!
Priyanka Chopra Parents
பிரியங்கா சோப்ராவின் பெற்றோர் ராணுவ மருத்துவர்கள் என்பதால், பல ஊர்களில் பணியமர்த்தப்பட்டனர். எனவே தன்னுடைய சிறு வயதில் இருந்தே, டெல்லி, சண்டிகர், லடாக், பரோலி, உள்ளிட்ட போன்ற பல இடங்களில், பிரியங்கா சோப்ரா தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை தொடர வேண்டி இருந்தது.
Miss World Priyanka Chopra
ப்ரியங்கா சோப்ரா தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பட நடிகையாக அறியப்பட்டாலும், இவர் தன்னுடைய கேரியரை துவங்கியது தமிழ் சினிமாவில் தான். தளபதி விஜய் நடிப்பில் 2002-ஆம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தில் நடித்தார். இந்த படம், வெற்றிபெற்ற போதிலும் அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்பு வரிசை கட்டி நின்றதால் முழுக்க முழுக்க இந்தியில் கவனம் செலுத்தினார்.
நாக சைத்தாயாவுக்கு முன் பிரபல தொழிலதிபரை காதலித்த சோபிதா! யார் அவர்?
Priyanka Chopra Bollywood Movies
ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், ஹரித்திக் ரோஷன், உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ப்ரியங்கா சோப்ரா, தன்னுடைய அழகை மெருகேற்றும் விதமாக, உதடு மற்றும் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். சில முன்னணி நடிகர்களுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய ப்ரியங்கா சோப்ரா, தன்னுடைய கேரியரில் ஹாலிவுட் பட நடிகையாக உயர்ந்தார்.
Priyanka Chopra and Nick Jonas
கடந்த 2018-ஆம் ஆண்டு, ஹாலிவுட் பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமண செய்து கொண்டார். நிக் ஜோனாஸ் பிரியங்காவை விட 10 வயது சிறியவர் என்பதால்... இவர்களுடைய திருமணமும் திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் வாடகை தாய் மூலம் மால்டி மேரி என்கிற மகளுக்கும் தாயானார்.
அட்ரா சக்க..! கயல் சீரியலில் அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபல வெள்ளித்திரை ஹீரோ!
Priyanka Chopra Daughter
தற்போது சுமார் 650 கோடிக்கு சொத்துக்கு அதிபதியாக, பிரைவேட் ஜெட், அமெரிக்காவில் இரண்டு பங்களா, விதவிதமான சொகுசு கார் என ராஜா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.