சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதித்தும் வாடகை வீட்டிலேயே காலத்தை ஓட்டும் பிரபலங்கள்!

First Published | Nov 21, 2024, 11:04 AM IST

சினிமாவில் கோடி கோடியாய் சம்பளம் வாங்கினாலும் சொந்தமாக வீடில்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் பிரபலங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Actors Who Stayed in Rental House

சொந்த வீடு என்பது ஒவ்வொருவரின் கனவாக உள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நிலங்களின் மதிப்பும் எகிறிக் கொண்டே செல்வதால் சொந்த வீடு என்பது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. சினிமா பிரபலங்கள் நன்கு சம்பாதித்தாலும் அவர்களும் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் நிலையில் தான் உள்ளனர். அப்படி சொந்த வீடின்றி வாடகை வீட்டில் வசித்து வரும் தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Kavin

கவின்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் கவின். இவர் நடிப்பில் தற்போது அரை டஜன் படங்கள் தயாராகி வருகின்றன. இவருக்கு கடந்த ஆண்டு மோனிகா என்பவருடன் திருமணம் ஆனது. தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் கவின், சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். இதை அவரே பேட்டிகளில் கூறி இருக்கிறார். கவின் நடிப்பில் தற்போது கிஸ், ஹாய், மாஸ்க் போன்ற படங்கள் தயாராகி வருகின்றன.

Tap to resize

parthiban

பார்த்திபன்

தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் பார்த்திபன். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தொடர்ந்து மக்களுக்காக கொடுத்து வரும் இவர், சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த டீன்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் பார்த்திபன்.

இதையும் படியுங்கள்... நயன்தாராவை ஓரம்கட்டி.. புஷ்பா 2வில் அதிக சம்பளம் வாங்கிய ராஷ்மிகா மந்தனா!

Ganja Karuppu

கஞ்சா கருப்பு

அமீர் இயக்கிய ராம் திரைப்படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. இதையடுத்து கார்த்தி நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற பருத்திவீரன் திரைப்படத்தில் தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்த கஞ்சா கருப்பு, டாக்டர் பெண்ணை மணமுடித்து சொந்தமாக வீடு வாங்கி செட்டில் ஆனார். பின்னர் சினிமாவில் படம் தயாரிக்க ஆசைப்பட்டு நஷ்டமாகி வீடுகளை விற்கும் நிலைக்கு சென்ற கஞ்சா கருப்பு தற்போது வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார்.

Actress shakeela

ஷகீலா

மலையாள திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. இவர் நடித்த படங்கள் சூப்பர்ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி படங்களுக்கு போட்டியாக வசூலை வாரிக்குவித்தன. அப்போது லட்ச லட்சமாக ஷகீலா சம்பாதித்தாலும் அந்த காசை கையில் வைத்திருந்தால் வருமான வரித்துறையில் சிக்கிவிடுவோம் என அஞ்சி, தன் உறவினர்களிடம் கொடுத்திருக்கிறார். அவர்கள் ஷகீலாவை நன்கு ஏமாற்றிவிட்டனர். இதனால் சொந்தமாக வீடு வாங்க முடியாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ஷகீலா.

vasantha balan

வசந்த பாலன்

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வசந்த பாலன். இவர் வெயில், காவியத் தலைவன், அங்காடித் தெரு என பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் இவருக்கென சொந்தமாக ஒரு வீடு கிடையாது. தற்போது வரை வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். இதை வசந்த பாலனே சமீபத்திய பேட்டியில் ஓப்பனாக கூறி இருந்தார். குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியாமல் இருப்பதாகவும் அவர் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... விஜய் மகனுக்கு நோ சொன்ன அனிருத்; ஜேசன் சஞ்சய் படத்துக்கு இசையமைக்க போவது இவரா?

Latest Videos

click me!