Published : Nov 21, 2024, 09:43 AM ISTUpdated : Nov 23, 2024, 07:12 PM IST
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன் மனைவியை பிரிவதாக அறிவித்த ஒரு மணிநேரத்தில் அவரிடம் பணியாற்றும் மோகினி டே என்கிற பெண்ணும் தன் கணவரை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்திருந்தார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்தது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. இருவரும் 29 வருட திருமண வாழ்க்கைக்கு பின் பிரிய முடிவெடுத்துள்ள செய்தி அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இருப்பினும் விவாகரத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதை இருவருமே வெளியிடவில்லை. அதை தெரிந்துகொள்ள ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
24
AR Rahman, Saira Banu
இதனிடையே, ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றி வந்த மோகினி டே என்கிற இசைக்கலைஞரும் நேற்று தன்னுடைய விவாகரத்து முடிவை அறிவித்து உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் அறிவித்த அடுத்த ஒரு மணிநேரத்தில் மோகினி டேவும் தன் கணவரை பிரிவதாக அறிவித்திருந்ததால், இருவரது இந்த முடிவையும் தொடர்பு படுத்தி சில வதந்திகளும் பரவி வந்தன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா பானு ஜோடியின் வழக்கறிஞர் வந்தனா ஷா விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, ஏ.ஆர்.ரகுமானுக்கும் மோகினி டேவுக்கும் எந்தவித தொடர்பும் என கூறியுள்ள அவர், சாய்ராவும், ரகுமானும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாகவும் கூறிய அவர், ஜீவனாம்சம் குறித்து இருவரும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இந்த முடிவை அவர்கள் இலகுவாக எடுக்கவில்லை என்றும் இருவரும் உண்மையானவர்கள் என்பதால் இதை போலி திருமணம் எனவும் சொல்ல முடியாது என வந்தனா ஷா கூறி உள்ளார்.
44
AR Rahman bassist Mohini Dey
29 வயதே ஆகும் மோகினி டே, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து 40க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறார். கொல்கத்தாவை சேர்ந்த இவர் மார்க் ஹர்ட்சச் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பும் ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்து அறிவிப்பும் அடுத்தடுத்து வந்தது தான் குழப்பத்தை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.