விஜய் மகனுக்கு நோ சொன்ன அனிருத்; ஜேசன் சஞ்சய் படத்துக்கு இசையமைக்க போவது இவரா?

First Published | Nov 21, 2024, 8:54 AM IST

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக உள்ள படத்திற்கு இசையமைக்கப்போவது யார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

Jason sanjay, Anirudh

நடிகர் விஜய் தமிழ் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள சூழலில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். விஜய் அரசியலில் குதித்துள்ளதால் தளபதி 69 படத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்து உள்ளார். விஜய்யின் இந்த முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அண்மையில் விஜய் நடத்திய தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டிற்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டதால் அவரின் அரசியல் எண்ட்ரி அதகளமாக ஆரம்பமாகி உள்ளது.

Vijay Son Jason sanjay

விஜய்க்கு அவரது மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இதற்காக அவர் பல முன்னணி இயக்குனரிடம் கதை கேட்டும் வந்தார். குறிப்பாக பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஜேசன் சஞ்சய்க்காக ஒரு கதையும் தயார் செய்து வைத்திருந்தார். ஆனால் சஞ்சய், தனக்கு நடிப்பில் இண்டிரஸ்ட் இல்லை என சொன்னதால், அவர் விருப்பப்படி என்ன செய்ய விரும்புகிறாரோ அதையே செய்யட்டும் என விஜய்யும் விட்டுவிட்டார்.

இதையும் படியுங்கள்... இந்தியாவின் மிகப்பெரிய ஃபிளாப் படம்! பிரபல இயக்குனர், உச்ச நடிகர் நடித்தும் டிசாஸ்டராக மாறிய படம்!

Tap to resize

Jason sanjay Debut Movie

இதனிடையே கடந்த ஆண்டு நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குனராக அறிமுகமாக உள்ளதாகவும், அவர் இயக்க உள்ள முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. அப்படத்தில் நடிக்க ஹீரோ கிடைக்காமல் திண்டாடிய ஜேசன் சஞ்சய், இறுதியாக நடிகர் சந்தீப் கிஷானை கமிட் செய்துள்ளார்.

Thaman

மேலும் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பார் என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால் தற்போது திடீர் ட்விஸ்டாக அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாகவும், இப்படம் குறித்த அப்டேட்டுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ரோல்ஸ் ராய்ஸ், BMW என ஏ.ஆர் ரஹ்மானிடம் இத்தனை ஆடம்பர கார்கள் இருக்கா? தலை சுற்ற வைக்கும் விலை!

Latest Videos

click me!