
மிஸ்டர் பர்ஃபெக்ட் என பெயரெடுத்த ஏ.ஆர்.ரகுமானையே தற்போது சத்திய சோதனைக்கு ஆளாக்கி உள்ளது இவருடைய விவாகரத்து விவகாரம். இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் குறித்து, சர்ச்சை பிரபலமான பயில்வான் ரங்கநாதன் பிரபல தனியார் youtube சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ள தகவல்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி அவர் என்னதான் கூறி உள்ளார்? என்பது பற்றி பார்க்கலாம்.
மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' திரைப்படத்தின் மூலம், வெள்ளி திரையில் தன்னுடைய இசை பணியை துவங்கிய ஏ.ஆர்.ரகுமான் முதல் படத்திலேயே தேசிய விருது நாயகனாக மாறினார். இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும், இன்றளவும் ரசிகர்கள் மனதை குளிர்வித்து வருகிறது. அந்த அளவுக்கு தன்னுடைய இசையை மனதார உணர வைத்திருப்பார் ஏ.ஆர்.ரகுமான். இந்த படத்தை தொடர்ந்து இவர் இசையமைத்த, அடுத்தடுத்த படங்களும், பாடல்களும், தனித்துவமான இசையோடு வெளியாகி முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பலம் சேர்த்தது.
ஆரம்பிச்சு ஒரு மாசம் கூட ஆகல; அதற்குள் 'கார்த்திகை தீபம்' சீரியலை விட்டு வெளியேறிய முக்கிய நடிகர்!
காதல், எமோஷன், த்ரில்லர், ஆக்சன், வரலாற்று கதை, என எந்த மாதிரியான கதைகளம் என்றாலும் தன்னுடைய முழு திறனை வெளிப்படுத்துபவர் ஏ ஆர் ரகுமான். தன்னுடைய பணியில் எந்த அளவுக்கு பிஸியாக இருந்தாலும், குடும்பத்தையும் கண்ணும் கருத்துமாக கவனிக்க தவறியது இல்லை.
ஏ ஆர் ரகுமானின் வெற்றிக்கு, அவருடைய மனைவியின் சாய்ராவின் பங்கு மிகவும் முக்கியமானது எனலாம். திரையுலகில் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஏ ஆர் ரகுமான், முழுமையாக அவருடைய பணியில் கவனம் செலுத்தும் சுதந்திரத்தை அவருக்கு கொடுத்து விட்டு, தன்னுடைய குடும்பத்தை கட்டி அணைத்து வெற்றிகரமாக நடத்தி வந்தார் சாய்ரா. தன்னுடைய 3 பிள்ளைகளையும் பொறுப்பாக வளத்துள்ள இவர், ஏ ஆர் ரகுமானை திருமணம் செய்து கொண்டு சுமார் 29 வருடங்களுக்குப் பிறகு அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ள சம்பவம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு திரைப்பட நிகழ்ச்சி என்றாலும், ஹீரோ - ஹீரோயினை மிஞ்சும் வகையில் மிகவும் க்யூட் ஜோடியாக வந்து போஸ் கொடுக்கும் சாய்ரா பானு - ஏ ஆர் ரகுமான் ஜோடி தங்களுடைய திருமண வாழ்க்கையில் இருந்து, அதுவும் 29 வருடம் கழித்து இப்படி ஒரு முடிவை எடுக்க என்ன காரணம் என்பதே பல ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன், இந்த மாதிரியான நேரத்தில் எங்களுக்கான பிரைவசியை கொடுக்குமாறு உருக்கமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதை போன்ற கருத்தை தான் கதீஜாவும் கூறி இருந்தார்.
இனி சேர்ந்து வாழ முடியாது; ஒற்றைக் காலில் நின்ற தனுஷ் - ஐஸ்வர்யா - கோர்ட் சொன்னதென்ன?
எந்த ஒரு கிசு கிசுவிலும் சிக்காத இந்த மனிதரின் சோதனை காலமாகவே இது பார்க்கப்படும் நிலையில், தற்போது பிரபல பத்திரிகையாளரும் - நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ஏ ஆர் ரகுமான் குறித்து youtube சேனலுக்கு கொடுத்த பேட்டியில், கூறி உள்ளதாவது... "ஏ ஆர் ரகுமான் உண்மையிலேயே எந்த ஒரு கிசுகிசுவிடும் சிக்காத உன்னதமான மனிதர். அவருடைய இந்த விவாகரத்து விஷயம் ரசிகர்களை மட்டுமின்றி சினிமா துறையை சேர்ந்தவர்களையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்து செய்தி வெளியான பின்னர், அவருக்கு வேறு ஒரு பெண்ணோடு உறவு என வாயிக்கு வந்ததை எல்லாம் சிலர் பேச துவங்கி இருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் சுத்த பொய். அவர் அப்படிப்பட்ட ஆள் கிடையவே கிடையாது. அதேபோல ராயன் படத்துக்கு இசையமைத்ததால் தான் ஏ ஆர் ரகுமானுக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக சிலர் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதுவும் தேவையில்லாத ஒன்று.
ஏ ஆர் ரகுமான் குடும்பத்துக்கு விவாகரத்து என்பது பழகிப்போன ஒன்று. அதாவது பரம்பரை நோய் போன்றது. ஏற்கனவே ஏ ஆர் ரகுமானின் சகோதரி ஒருவர், பத்திரிகையாளரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார். இதைத்தொடர்ந்து ஏ ஆர் ரகுமானின் சகோதரியின் மகனான ஜிவி பிரகாஷும் தன்னுடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டார். இப்போது ஏ ஆர் ரகுமானும் விவாகரத்து பெற்றுள்ளார்.
அதே சமயம் எப்போதும் சர்ச்சையான விஷயங்களை கொளுத்தி போடும் பயில்வான் இந்த பேட்டியில் ஏ.ஆர்.ரகுமான் பற்றி பெருமையாக பேசியுள்ளதை நோட் செய்து நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.