முதல் முதலில் நயன்தாராவிற்கும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது, பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான். இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த திரைப்படத்திலிருந்து சுமார் மூன்று நொடி காட்சியை தங்களுடைய Netflix தொடருக்காக பயன்படுத்தியதற்காக சுமார் 10 கோடி ரூபாய் நயன்தாராவிடம் நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று விடப்பட்டது. ஆனால் அது மூன்று வினாடி வீடியோ அல்ல கிட்டத்தட்ட 40 வினாடிகள் ஓடும் வீடியோ, ஆகையால் நயன்தாரா நிச்சயம் தனுஷ் கேட்ட தொகையை இழப்பீடாக கொடுத்தே ஆக வேண்டும் என்றும் ஒரு சாராரும், இல்லை இல்லை, தனுஷ் தான் நயன்தாராவை ஏமாற்றியுள்ளார் என்று ஒரு சாராரும் பேசி வருகின்றனர்.