பிக் பாஸில் இந்த வாரம் கண்ணீரோடு எலிமினேட் ஆகப்போவது இந்த சண்டைக்கோழி தானா?

Published : Nov 22, 2024, 07:43 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 13 பேரில் இருந்து எலிமினேட் ஆகப்போகும் அந்த போட்டியாளர் யார் என்பதை பார்க்கலாம்.

PREV
14
பிக் பாஸில் இந்த வாரம் கண்ணீரோடு எலிமினேட் ஆகப்போவது இந்த சண்டைக்கோழி தானா?
Bigg Boss Tamil season 8

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 5 பேர் எலிமினேட் ஆகி உள்ளனர். முதல் வாரம் ரவீந்தர் எலிமினேட் ஆன நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகியோர் எலிமினேட் ஆகினர். இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ராஜா, ராணி டாஸ்க் நடைபெற்றது. இதில் ஆண்கள் அணியில் இருந்து ராஜாவாக ரானவ் நடித்திருந்தார். பெண்கள் அணியில் இருந்து ராணியாக சாச்சனா நடித்திருந்தார்.

24
Bigg Boss Tamil season 8 contestants

இருதரப்பிற்கும் நடந்த டாஸ்க்குகள் அடிப்படையில் யார் அதிக முறை வெற்றிபெறுகிறாகளோ அவர்களுக்கு அரியணை வழங்கப்படும் என பிக் பாஸ் அறிவித்திருந்தார். இதையடுத்து கிடைக்கும் டாஸ்க்குகளில் எல்லாம் பர்ஸ்ட் கிளாஸ் ஆக விளையாடிய ஆண்கள் அணியினர் 4 போட்டிகளில் வெற்றிபெற்று அரியணையை கைப்பற்றினர். பெண்கள் அணியினரால் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற முடிந்தது. இதனால் அரியணை ஏறும் வாய்ப்பை நழுவவிட்டார் சாச்சனா.

இதையும் படியுங்கள்... ஒரே வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த 2 காதல் - யார் அந்த ஜோடி புறாக்கள் தெரியுமா?

34
Bigg Boss This week Elimination

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடைபெறும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் மொத்தம் 13 போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர். அவர்களில் முத்துக்குமரனும், செளந்தர்யாவும் அதிக வாக்குகளை பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். அடுத்ததாக விஷால், ராணவ், ஜாக்குலின், அருண் பிரசாத், பவித்ரா, ரயான், தர்ஷிகா ஆகியோரும் கணிசமான வாக்குகளை பெற்று சேஃப் ஜோனில் தான் உள்ளனர்.

44
Sachana in Danger zone

இந்த வாரம் கம்மியான வாக்குகளை பெற்று டேஞ்சர் ஜோனில் இருக்கும் போட்டியாளர்கள் வர்ஷினி வெங்கட், ஆனந்தி, சாச்சனா மற்றும் சிவக்குமார் ஆகிய நான்குபேர். இதில் சிவக்குமாருக்கு தான் மிகவும் கம்மியான வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால் அவரை ஆண்கள் அணியின் நாமினேஷன் பாஸ் கொடுத்து காப்பாற்றிவிட்டதால் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்துவிட்டார். இதனால் வர்ஷினி, ஆனந்தி, சாச்சனா ஆகிய மூவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக உள்ளனர். அதிலும் சாச்சனா தான் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் இருப்பதால் அவர் எலிமினேட் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... 50வது நாளில் அடுத்த வைல்டு கார்டு எண்ட்ரி; பிக் பாஸில் செம ட்விஸ்ட் வெயிட்டிங்!

click me!

Recommended Stories