தமிழ் சினிமாவில் ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, ரஜினிகாந்த், விஜயகாந்த், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சீதா. தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தன்னுடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 1/2 சவரன் நகை காணாமல் போனதாக போலீசில் புகார் கொடுத்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.