ஷாருக்கான், ரஜினி, விஜய் இல்ல! இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர் இவர் தான்!

Published : Nov 22, 2024, 12:02 PM IST

இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா? பாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளி தென்னிந்திய நடிகர் ஒருவர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
ஷாருக்கான், ரஜினி, விஜய் இல்ல! இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர் இவர் தான்!
Most Popular Star In India

பிரபாஸ் ஒரு பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற நட்சத்திரங்களை விஞ்சி, இந்தியாவின் மிகவும் பிரபலமான திரைப்பட நடிகராக பிரபாஸ் உருவெடுத்துள்ளார். Ormax நிறுவனம் நேற்று “Ormax Stars India Loves: Most popular male film stars in India (Oct 2024)” பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் தான் பிரபாஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை நடிகர் விஜய் பிடித்துள்ளார்.

25
Most Popular Star In India

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்., அதைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் 4-வது இடத்திலும், அஜித் குமார் 5-வது இடத்திலும் உள்ளனர். நடிகர் அல்லு அர்ஜுன் 6-வது இடத்திலும், மகேஷ் பாபு ஏழாவது இடத்திலும், சூர்யா 8-வது இடத்திலும், ராம் சரண் 9வது இடத்திலும் உள்ளனர். நடிகர் சல்மான் கான் 10வது இடத்தில் இருந்தார்.

35
Most Popular Star In India

இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர் பட்டியலில் பிரபாஸ் முதலிடத்தில் இருக்கும் நிலையில், அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். 

ரெபல் ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரபாஸ் சமீபத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி 2898 படத்தில் நடித்திருந்தார். தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது.. இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

 

45
Most Popular Star In India

பிரபாஸ் தற்போது சலார் 2 படத்திலும், கல்கி 2898 ஏடி படத்தின் அடுத்த பாகத்திலும் நடித்து வருகிறார். மேலும் தி ராஜா சாப், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் ஆகிய படங்களையும் அவர் கைவசம் வைத்திருக்கிறார். ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் பிரபாஸ் மூன்று பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

55
Most Popular Star In India

சமீபத்தில், பிரசாந்த் நீல் இயக்கிய அவரது வரவிருக்கும் படமான சாலார் பார்ட் 2  தயாரிக்கப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. பிரபாஸின் கைவசம் தற்போது ரூ. 1700 கோடி மதிப்பிலான திட்டங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories