ரிலீசுக்கு முன்பே கங்குவாவை விட அதிக வசூலை வாரிக்குவித்த அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி!

First Published | Nov 22, 2024, 2:00 PM IST

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றி உள்ளது.

Vidaamuyarchi, Good Bad Ugly

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு துணிவு படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதன் பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர் நடித்த ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. இதனால் இந்த ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமான ஆண்டாகவே அமைந்துள்ளது. இருந்தாலும் 2025-ம் ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது. ஏனெனில் அவர் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் தயாராகி வருகிறது.

Vidaamuyarchi

அதில் ஒரு படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் ஆரவ், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், நடிகை ரெஜினா கசெண்ட்ரா என மிகப்பெரிய நட்சத்திர படாளமே நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் 1-ந் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாளன்று இப்படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஒரு பாட்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம்! இந்தியாவின் டாப் பாடகி! இவங்க கணவரும் வெயிட்டு பார்ட்டி தான்!

Latest Videos


Good Bad Ugly

அதேபோல் அஜித் கைவசம் உள்ள மற்றொரு படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா தான் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் அர்ஜுன் தாஸ், எஸ்.ஜே.சூர்யா போன்ற திறமை வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது.

Vidaamuyarchi and Good Bad Ugly OTT Rights

இந்நிலையில், இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்கு முன்பே வசூலை வாரிக்குவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த இரண்டு படங்களின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளதாம். விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.75 கோடிக்கும், குட் பேட் அக்லி படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.95 கோடிக்கும் அந்நிறுவனம் வாங்கி இருக்கிறதாம். இந்த இரண்டு படங்களின் டிஜிட்டல் உரிமை விற்பனையான அளவு கூட சூர்யாவின் கங்குவா படம் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 250 கோடியில் உருவான ஷாருக்கான் பட வசூலை 5 கோடியில் படமெடுத்து அசால்டா அடிச்சுதூக்கிய அமீர்கான்!

click me!