MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 250 கோடியில் உருவான ஷாருக்கான் பட வசூலை 5 கோடியில் படமெடுத்து அசால்டா அடிச்சுதூக்கிய அமீர்கான்!

250 கோடியில் உருவான ஷாருக்கான் பட வசூலை 5 கோடியில் படமெடுத்து அசால்டா அடிச்சுதூக்கிய அமீர்கான்!

அமீர் கான் 5 கோடி பட்ஜெட்டில் எடுத்த திரைப்படம், ஷாருக்கானின் 250 கோடி பட்ஜெட் படத்தின் சாதனையை முறியடித்து இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 22 2024, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Shah Rukh Khan vs Aamir Khan

Shah Rukh Khan vs Aamir Khan

பாலிவுட் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக திகழ்ந்து வருபவர் ஷாருக்கான். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடித்த ஜீரோ படம் படுதோல்வியை சந்தித்ததை அடுத்து, சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். இதனால் அவர் நடிப்பில் 2023-ம் ஆண்டு வரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆக வில்லை. இதையடுத்து 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதான் படம் மூலம் கம்பேக் கொடுத்தார் ஷாருக்கான். அப்படம் பாக்ஸ் ஆபிஸீலும் வசூல் வேட்டையாடி ரூ.1000 கோடி வசூலை வாரிக்குவித்தது.

24
Shah Rukh Khan- Aamir Khan

Shah Rukh Khan- Aamir Khan

இதோடு நிற்காமல் அந்த ஆண்டே அவர் மற்றுமொரு 1000 கோடி வசூல் படத்தை கொடுத்தார் ஷாருக்கான். அப்படம் தான் ஜவான். அட்லீ இயக்கிய இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களோடு நிற்காமல் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டுங்கி என்கிற படத்தை கொடுத்து ஹாட்ரிக் வெற்றியை ருசித்தார் ஷாருக்கான். அந்த ஆண்டு மட்டுமே அவர் நடித்த படங்கள் மட்டும் சுமார் 2500 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

இதையும் படியுங்கள்... வீட்டில் இருந்தபடியே டைம்பாஸ் பண்ண; இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் படங்கள் லிஸ்ட் இதோ

34
Pathaan

Pathaan

பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு போட்டியாக உள்ள மற்றொரு நடிகர் என்றால் அது அமீர்கான் தான். இவரது தங்கல் படம் தான் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த படமாகும், அந்த சாதனையை எந்த படமும் இதுவரை முறியடிக்கவில்லை. இந்த நிலையில் ஷாருக்கானின் பதான் பட சாதனையை அமீர் கான் தயாரிப்பில் வெளியான லாபட்டா லேடீஸ் திரைப்படம் முறியடித்து உள்ளது. அதுவும் இந்தியாவில் அல்ல ஜப்பானில்... லாபட்டா லேடீஸ் திரைப்படம் ஜப்பானில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.

44
Laapataa ladies Japan Box Office

Laapataa ladies Japan Box Office

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஷாருக்கான் நடித்த பதான் படம் சுமார் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் அதன் வசூலை முறியடித்துள்ள லாபட்டா லேடீஸ் திரைப்படத்தை வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுத்திருந்தார் அமீர்கான். பதான் படம் ஜப்பானில் 2.70 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது 45 நாட்களைக் கடந்து ஜப்பானில் வெற்றிநடை போட்டு வரும் லாபட்டா லேடீஸ் திரைப்படம் 2.70 கோடிக்கு மேல் வசூலித்து தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது.

இதையும் படியுங்கள்... ஷாருக்கான், ரஜினி, விஜய் இல்ல! இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர் இவர் தான்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஷாருக் கான்
ஆமிர் கான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சம்பளம் தான் காரணமா? மணிரத்னம் பட வாய்ப்பை தட்டி கழித்த தனுஷ் - கோலிவுட்டில் வெடித்த சர்ச்சை!
Recommended image2
கழுவி ஊற்றிய தவெக-வினர்... மீண்டும் வீடியோ போட்டு விஜய்யை வம்பிழுத்த ஜூலி..!
Recommended image3
"பாக்யராஜால் என் வாழ்க்கையே போச்சு!" - நண்பனைச் சீண்டும் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.! வைரலாகும் வீடியோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved