2.5 மணி நேரம் மேக்கப்: புஷ்பா 2 மூவில லேடி கெட்டப் போட்டதால முதுகு வலியே வந்துருச்சு; அல்லு அர்ஜூன் ஓபன் டாக்!

First Published | Nov 22, 2024, 4:34 PM IST

Allu Arjun faced pain for female role in Pushpa 2: புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூன் லேடி கெட்டப்புக்கு பின்னால் இவ்வளவு வலியும், வேதனையும் இருந்திருக்கிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Pushpa 2 The Rule Release Date

Allu Arjun faced pain for female role in Pushpa 2: தெலுங்கு சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். சிரஞ்சீவி நடிப்பில் வெளியான விஜேதா படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் எண்ட்ரியானார் அல்லு அர்ஜூன். 2001 ஆம் ஆண்டு டாடி என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமானார். கங்கோத்ரி படமே அவரை ஹீரோவாக்கியது.

Pushpa 2 Sreeleela

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவும் அவரை கொண்டாடி வருகிறது. DJ: துவ்வாடா ஜகன்னாதம், ஆள வைகுந்தபுரமுலோ என்ற சூப்பர் படங்களை கொடுத்த அல்லு அர்ஜூன் கடைசியாக 2021 ஆம் ஆண்டு புஷ்பா: தி ரைஸ் படத்தை கொடுத்தார். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதற்கு காரணமாக புஷ்பா பட கதையும், படத்தில் வரும் பாடல்களும் தான். ஊ ஆண்டவா, சாமி ஆகிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பரவி ஹிட்டோ ஹிட் கொடுத்தது.

Tap to resize

Pushpa 2 Movie

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வெளியான படம் புஷ்பா. ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.393.50 கோடி வரையில் வசூல் குவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு புஷ்பா 2 தி ரூல் படம் உருவாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டிரைலர் வெளியானது.

Pushpa 2 Allu Arjun, Rashmika Mandanna

வரும் டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 படம் வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தை விட 2ம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படியும் இந்த படம் ரூ.1000 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் இந்த படத்தில் அல்லு அர்ஜூன் பெண் கேரக்டரில் வந்த போது சுவாரஸ்யமாக இருந்தாலும் அதில் என்ன நடந்தது என்பது குறித்து அல்லு அர்ஜூன் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்ஸ்டாப்பபிள் வித் என்பிகே என்ற நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

Pushpa 2 Release Date

அதில் புஷ்பா 2 படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் பெண் கெட்டப் பற்றி கேட்ட போது அந்த கெட்டப் போட்டு நடிப்பது என்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. அதற்கான மேக்கப் மட்டும் இரண்டரை மணி நேரம் போட வேண்டியிருந்தது. அதுமட்டுமின்றி உடல் மற்றும் மன அழுத்தத்தையும் கொடுத்தது. முதுகு பகுதியில் வலியும் அதிகமாக இருந்தது.

Pushpa 2: The Rule, Allu Arjun

சில நேரங்களில் படப்பிடிப்பும் நிறுத்தும் சூழல் ஏற்பட்டது. ஆனால் கொஞ்சம் மன அழுத்தம் இருந்தது என்றார். சினிமாவைப் பொறுத்த வரையில் ஒரு சில காட்சிக்கு அதிகளவில் முக்கியத்தும் கொடுக்கப்படும். அப்படிப்பட்ட காட்சிகள் தான் ரசிகர்கள் மனதில் இருக்கும். அப்படி ஒரு கெட்டப்பில் தான் இந்த படத்தில் அல்லு அர்ஜூன் நடிச்சிருக்காரு

தனது முதல் படமான கங்கோத்ரியில் லேட்டி கெட்டப்பில் நடித்திருந்தாலும் புஷ்பா 2 படமே அதிக முக்கியத்துவம் கொண்ட படமாக பார்க்கப்படுகிறது. புஷ்பா படத்தில் இடம் பெற்றது போன்று இந்தப் படத்திலும் ஐட்டம் பாடல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருதை வென்று கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!