"அரசியல் பற்றி தான் பேசினோம்" ரஜினியுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட சீமான்!

Ansgar R |  
Published : Nov 22, 2024, 05:44 PM IST

Seeman Met Rajini : பிரபல நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் சந்திப்பு என்றும் கூறியுள்ளார்.

PREV
14
"அரசியல் பற்றி தான் பேசினோம்" ரஜினியுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட சீமான்!
Rajinikanth

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக நடிகர் விஜய் கட்சி துவங்கிய புதிதில் தளபதி விஜயை பெரிய அளவில் பாராட்டி பேசி வந்தார். "என் தம்பி அவர், விஜய் என்னை எதிர்த்தே அரசியல் செய்தாலும் அவரை நான் வரவேற்பேன்" என்று பேசியிருந்தார் சீமான். ஆனால் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேடி விக்ரவாண்டியில் நடந்த தளபதி விஜயின் அரசியல் மாநாட்டிற்கு பிறகு அவருடைய நிலைப்பாடு ரொம்பவே மாறியது. "இனி அண்ணன், தம்பி என்று எதுவுமே இல்லை அவர் எங்கள் எதிரி தான். விஜயின் கட்சி கொள்கைகள் சரியில்லை" என்றெல்லாம் பேசினார் சீமான்.

தளபதியின் சாதனை; அடிச்சு நொறுக்கிய சிவகார்த்திகேயன் - மாஸ் காட்டும் அமரன்!

24
TVK Vijay

ஆனால் சீமான் என்ன தான் விஜயை நேரடியாக தாக்கி பேசினாலும் விஜய் தரப்பில் இருந்து எந்தவிதமான எதிர்ப்பும் வரவேயில்லை என்று தான் கூறவேண்டும். அதே போல அரசியலில் விஜய் களமிறங்கியபோது அவரை பெரிய அளவில் வரவேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனும், விஜயின் மாநாட்டிற்கு பிறகு பெரிய அளவில் அவரை எதிர்க்க துவங்கினார். பாசிசம், பாயாசம் என்று யாரை அவர் இப்படி பேசுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் கட்சியின் கொள்கைகள் ஏற்புடையதாகயில்லை என்றெல்லாம் பேசினார் திருமாவளவன்.

34
Vijay

ஆனால் தளபதி விஜய் எதற்கும் அசைந்து கொடுக்காமல் இப்பொது தனது உறுதிபட பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் இன்று பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து திரும்பியுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். மேலும் ரஜினியை சந்தித்து பேசியது முழுக்க முழுக்க அரசியல் சம்மந்தமான சந்திப்பே என்று கூறியுள்ளார் அவர். இன்று நவம்பர் 22ம் தேதி ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துவிட்டு புறப்படும்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் பின்வருமாறு பேசியுள்ளார்.

44
Seeman

"சங்கி என்றால் சக தோழன் என்று தான் அர்த்தம். ரஜினிகாந்தை சந்திப்பது என்பதே அரசியல் தான். அரசியல் இல்லாமல் இங்கு எதுவுமே இல்லை. திரையுலகம் குறித்தும் அவரோடு இணைந்து பேசினேன். சிஸ்டம் சரியில்லை என்று என்னிடம் கூறினார். அதை தான் நான் பல காலமாக அமைப்பு சரியில்லை என்று கூறுகிறேன்" என்று பேசியுள்ளார். விஜய் மற்றும் ரஜினி போன்ற திரை பிரபலங்களை ஒரு கட்டத்தில் ஒருமையில் பேசி கடுமையாக விமர்சித்தவர் சீமான் என்பது அனைவரும் அறிந்ததே.

2.5 மணி நேரம் மேக்கப்: புஷ்பா 2 மூவில லேடி கெட்டப் போட்டதால முதுகு வலியே வந்துருச்சு; அல்லு அர்ஜூன் ஓபன் டாக்!

Read more Photos on
click me!

Recommended Stories