Dhanush: இந்த நடிகை தான் வேண்டும்!அடம்பிடித்து தளபதி நாயகியை கமிட் செய்த தனுஷ்! வாரி வழங்கப்படுகிறதா சம்பளம்?

Published : Aug 14, 2023, 03:18 PM ISTUpdated : Aug 14, 2023, 03:23 PM IST

நடிகர் தனுஷ் நடிக்கும் 51 ஆவது படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

PREV
17
Dhanush: இந்த நடிகை தான் வேண்டும்!அடம்பிடித்து தளபதி நாயகியை கமிட் செய்த தனுஷ்! வாரி வழங்கப்படுகிறதா சம்பளம்?

தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தனுஷ். கடந்த 2002 ஆம் ஆண்டு அவரின் சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தனுஷ், ஆரம்ப காலத்தில் தன்னுடைய தோற்றதால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானவர்.
 

27

ஆனால் விமர்சனங்களை தாண்டி முதல் படத்தில் வெற்றி பெற்ற தனுஷ், இதைத்தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையில் சரவணன், சுள்ளான், தேவதையை கண்டேன், என அடுத்தடுத்து தன்னுடைய நடிப்பையும், தன்னையும் மெருகேற்றிக் கொண்டே சென்றார். இதன் பலனாக ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய படங்களுக்கு தேசிய விருதை வென்றார்.
அமெரிக்காவில் அலப்பறை கிளப்பும் ரஜினி! விஜய், அஜித்தை விரட்டி அடித்து சூப்பர்ஸ்டார் படைத்த மாபெரும் சாதனை

37

தனுஷ், தமிழை தாண்டி தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். அதே போல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாரிசிரியர்,  என பன்முக திறமையுடன் விளங்கி வருகிறார். 21 வருட திரையுலக வாழ்க்கையில், தற்போது தன்னுடைய 50-ஆவது படத்தை தானே இயக்கி நடிக்கவும் உள்ளார்.

47

ஏற்கனவே இவர் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜ்கிரண் கதையின் நாயகனாக நடித்த பா பாண்டி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாகி ஆறு வருடம் ஆகும் நிலையில், மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார் தனுஷ். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு சிம்பிளாக வளைகாப்பு நடத்திய பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமன் - வைரல் கிளிக்ஸ் இதோ

57

மேலும் தற்காலிகமாக D50 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் வடசென்னை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மல்டி ஸ்டார் படமாக உருவாக்கி வரும் இந்த படத்தில், எஸ் ஜே சூர்யா, துஷரா விஜயன், காளிதாஸ், அபர்ணா பால முரளி, சந்தீப் கிஷன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் பிரபல நடிகை அனிகா சுரேந்திரனும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
 

67

தனுசுக்கு ஜோடியாக திரிஷா இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்குனர் சேகர் கமுல்லா இயக்கத்தில் தன்னுடைய 51-ஆவது படத்தை நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிக்கா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் ரஜினி ராஜ்ஜியம்... வாரிசு பட லைஃப் டைம் கலெக்‌ஷனை நான்கே நாட்களில் தட்டி தூக்கிய ஜெயிலர்

77

டோலிவுட், பாலிவுட், என படு பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா தான்,  தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என அடம்பிடித்து, சம்பளத்தை வாரி வழங்கி இந்த படத்தில் கமிட் செய்ய தனுஷ் கூறியதாக கூறப்படுகிறது .கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories