ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். இப்படத்தில் நடிகை திரிஷாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கணேஷ். இதையடுத்து தீயா வேலை செய்யனும் குமாரு, கோ, பனித்துளி, உன்னைப்போல் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்த கணேஷ் வெங்கட்ராமனுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.