தமிழ் சினிமாவில் தற்போது பிசியான ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா. பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை திரிஷாவின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. இதனால் தற்போது 40 வயதை எட்டிய போதிலும் நடிகை திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகை திரிஷா நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா.
அவர் எந்த நாட்டுக்கு சென்றிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அந்த தகவல் லீக் ஆகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் நார்வே நாட்டுக்கு தான் சுற்றுலா சென்றிருக்கிறார். அதுவும் தனியாக இல்லை, நடிகை திரிஷா உடன். விஜய்யும், திரிஷாவும் நார்வே நாட்டில் ஜோடியாக ஷாப்பிங் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது.
ajith
இதில் மற்றுமொரு ஆச்சர்ய தகவல் என்னவென்றால், நடிகர் அஜித்தும் தற்போது நார்வே நாட்டில் தான் உள்ளார். அவர் சிங்கிளாக அந்நாட்டில் பைக் ரைடிங் செய்து வருகிறார். விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள திரிஷா, அடுத்ததாக நடிகர் அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் ரஜினி ராஜ்ஜியம்... வாரிசு பட லைஃப் டைம் கலெக்ஷனை நான்கே நாட்களில் தட்டி தூக்கிய ஜெயிலர்