இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ், துள்ளுவதோ இளமை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆரம்ப காலகட்டத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட தனுஷ், இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். இதற்கு காரணம் அவரின் கடின உழைப்பு தான். தற்போது கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என செம்ம பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் தனுஷ்.
ராயன் படத்தை தொடர்ந்து இந்தியில் ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இதுதவிர தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், கமல்ஹாசன் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் படம், வெற்றிமாறனுடன் வட சென்னை 2, செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் என தனுஷ் கைவசம் உள்ள படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
கிட்டத்தட்ட அடுத்த 5 ஆண்டுகளுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்த படங்களில் செம்ம பிசியாக நடித்து வரும் தனுஷ், அண்மையில் தனது பள்ளி நண்பர்களை சந்தித்துள்ளார். சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களை அழைத்து ரியூனியன் ஒன்றை நடத்தி இருக்கிறார் தனுஷ். அந்த ரீயூனியனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சந்திப்பின் போது தன்னுடைய பள்ளிப்பருவ நினைவுகளை நண்பர்களோடு பகிர்ந்து மகிழ்ந்துள்ளார் தனுஷ்.
இதையும் படியுங்கள்... நார்வேயில் தல - தளபதி! சிங்கிளாக அஜித்... திரிஷாவுடன் ஜோடியாக வலம் வரும் விஜய் - லீக் ஆன போட்டோ