Jailer
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக உள்ளது ஜெயிலர் திரைப்படம் தான். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். இதில் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, மிர்ணா, விடிவி கணேஷ், ஷிவ ராஜ்குமார், மோகன்லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்து உள்ளது.
2023-ம் ஆண்டில் வெளியாகி அமெரிக்காவில் அதிகம் லாபம் ஈட்டிய படங்களின் பட்டியலில் ஜெயிலர் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக போர் தொழில் இரண்டாம் இடத்திலும், பொன்னியின் செல்வன் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. அஜித்தின் துணிவு, தனுஷின் வாத்தி ஆகிய திரைப்படங்கள் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளன. கடைசி இரண்டு இடத்தில் மாமன்னன் மற்றும் விடுதலை ஆகிய படங்கள் உள்ளன.