தளபதி விஜய்யின் 'வாரிசு' படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. என்ன ரோலில் தெரியுமா?

First Published | Jul 26, 2022, 7:07 PM IST

வாரிசு படத்தின் புதிய அப்டேட் இதில் எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளது தான். இயக்குனரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா  வாரிசு படத்தில் காமியோ ரோலில்  வருவார் என தெரிகிறது.

varisu

விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றதை அடுத்த சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது.  மீண்டும் ஹைதராபாத் சென்ற பட குழுவினர் அங்கு சில காட்சிகளை முடித்த கையோடு விசாகப்பட்டினம் புறப்படுவார்கள் என தெரிகிறது. இதற்கிடையே  ஓய்வு எடுக்க விஜய் வீடு திரும்பி உள்ளார். நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளியுடன் கைகோர்த்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...'தி மெட்ராஸ் மர்டர்' வெப் தொடரில் இணைந்த பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்..

varisu

இந்த படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூன்று டைட்டிலுக்குகள் வெளியாகி வைரலான வைரலாகின. அதோடு அவ்வப்போது படப்பிடிப்பு தள காட்சிகளும், வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன்  பிரபு, ஜெயசுதா, சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், ஷாம், சம்யுக்தா, பிரகாஷ் ராஜ் மற்றும் யோகி பாபு என பலர் நடித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...'காசுக்காக நடிக்க வந்தேன்’..சினிமா பயணம் குறித்து சூர்யாவின் உருக்கமான பேட்டி!

Tap to resize

varisu

குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகும் வாரிசு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு தமன் இசை அமைத்து வருகிறார்.

s j surya

வாரிசு படத்தின் புதிய அப்டேட் இதில் எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளது தான். இயக்குனரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா  வாரிசு படத்தில் காமியோ ரோலில்  வருவார் என தெரிகிறது. இதற்கென இரண்டு நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் .

மேலும் செய்திகளுக்கு...கார்த்தி வெளியிட்ட ...சீதா ராமம் ட்ரைலர்..நாயகியை தேடும் ராஷ்மிகா..துல்கர் சல்மான்..

ஆனால் இவரது ரோல் படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்துக்காக ஒரு சில முன்னணி ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும்  கடைசியாக எஸ் ஜே சூர்யாவை வம்சி புக் செய்ததாகவும் டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Latest Videos

click me!