'காசுக்காக நடிக்க வந்தேன்’..சினிமா பயணம் குறித்து சூர்யாவின் உருக்கமான பேட்டி!

First Published | Jul 26, 2022, 6:01 PM IST

சூர்யாவின் தந்தை தன் மகன் பல விருதுகளை குவிப்பான் என ஜோசியர் சொன்ன போது தானும் தன் மனைவியும் நம்பவில்லை என கூறிய பேட்டி சமூக வலைதளங்களில் உலா வந்த நிலையில் பிரபல பத்திரிக்கையுடன் சூர்யா பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

suriya

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா, கார்த்தி இருவரும் இன்றைய டாப் 10 நாயகர்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டனர். கடந்த 1997-ம் ஆண்டு  தன் கல்லூரி காலத்தில் நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார் சூர்யா. இந்த படத்தில் இளைய தளபதி விஜய் உடன் இவர் நடித்திருந்தார். முதல் படம் என்றாலும் தான் வாரிசு நடிகர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்  சூர்யா.

suriya

இதை எடுத்து இவருக்கு நந்தா படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுக்க, பிதாமகன், கஜினி, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், சிங்கம், ஏழாம் அறிவு உள்ளிட்டவை வெற்றிப் படங்களாக அமைந்தன. அதோடு கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா நடித்த சூரரைப் போற்று பல விருதுகளை குவித்து வருகிறது. இதற்கு சமீபத்தில் ஐந்து தேசிய விருதுகள் கிடைத்தன.

மேலும் செய்திகளுக்கு...'தி மெட்ராஸ் மர்டர்' வெப் தொடரில் இணைந்த பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்..

அதன்படி சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருதும், அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த திரைக்கதைக்கான விருது சுதா கோங்காராவுக்கும், இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷுக்கும், சிறந்த திரைப்படத்திற்கான விருது சூரரை போற்று க்கும் கிடைத்தது. தனது பிறந்தநாள் பரிசாக தேசிய விருதை பெற்ற மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளார் சூர்யா.

Tap to resize

suriya

இதற்கிடையே அவரது தந்தை தன்மகன் பல விருதுகளை குவிப்பான் என ஜோசியர் சொன்ன போது தானும் தன் மனைவியும் நம்பவில்லை என கூறிய பேட்டியும் சமூக வலைதளங்களில் உலா வந்தன. இந்நிலையில் சமீபத்தில்  பிரபல பத்திரிக்கையுடன்  சூர்யா பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...கார்த்தி வெளியிட்ட ...சீதா ராமம் ட்ரைலர்..நாயகியை தேடும் ராஷ்மிகா..துல்கர் சல்மான்..

அந்த பேட்டியில்  சூர்யா ,"நான் என்னோட நண்பர்களிடம் நடிக்கப் போறேன் என்று சொன்னபோது அவர்கள் நம்பாமல் சிரித்தனர். பின்னர் நேருக்கு நேர் என்கிற படத்தின் கமிட்டானேன். அந்த படத்திற்கு ஐம்பதாயிரம் சம்பளம் கொடுத்தாங்க. அப்போது எங்களுக்கு 25 ஆயிரம் கடன் இருந்தது. காசுக்காக தான் நடிக்க ஆரம்பித்தேன் என குறிப்பிட்டுள்ளார் தேசிய விருது நாயகன்.

Suriya

மேலும் செய்திகளுக்கு....லண்டனிலிருந்து வர மனமில்லை..டாக்டர் நாயகி பிரியங்கா மோகனின் பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்

இவர் தற்போது பாலாவுடன் வணங்கான் படத்திலும்,  வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். முன்னதாக உலகநாயகன் கமலஹாசனின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. அதோடு இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் சூரரை போற்று படத்தை 2 டி நிறுவனம் மூலம் தயாரிக்கும் சூர்யா அந்த படத்தில் அக்ஷய் குமாருடன் ஒரு காமியோவிலும் தோன்ற உள்ளார்.

Latest Videos

click me!