லண்டனிலிருந்து வர மனமில்லை..டாக்டர் நாயகி பிரியங்கா மோகனின் பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்

First Published | Jul 26, 2022, 4:23 PM IST

முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்ட பிரியங்கா, நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக இயக்க உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதிய 67 படங்களிலும் இவர் நடிப்பார் என ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

Priyanka Mohan

நெல்சன் இயக்கத்தில் வெளியாகி பிளாக் பாஸ்டர் அடித்த படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன். வெகுளியான பெண்ணாக தோன்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிரியங்கா  மோகனுக்கு சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் செய்திகளுக்கு...இந்தூரில் ரன்வீர் சிங்கிற்கு ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி...நிர்வாண போஸால் அடுத்தடுத்த சிக்கலில் சிக்கிய பிரபலம்.

Priyanka Mohan

எதற்கும் துணிந்தவன் படத்தில் மிகவும் தைரியமான பெண்ணாக துணிச்சலை காட்டி மிரள வைத்திருந்தார். இதை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமீபத்தில் வெளியான டான் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கல்லூரி மாணவியாக தோன்றினார் பிரியங்கா.

மேலும் செய்திகளுக்கு...சிம்புவுக்கு கிடைக்காத சிறப்பை அறிமுக படத்திலேயே தட்டி தூக்கிய தி லெஜண்ட்.. என்ன விஷயம் தெரியுமா?

Tap to resize

Priyanka Mohan

நாயகனுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் நாயகியாக வரும் இவர் முன்னதாக  பீஸ்ட் வெளியான பிறகு இவர் நெல்சன் மற்றும் அவரது குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் வைரலாகி இருந்தது.

மேலும் செய்திகளுக்கு...பாலிவுட் பிரபலம் கத்ரீனா ஃகைப் - விக்கி கௌசல் ஜோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!

Priyanka Mohan

தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்ட பிரியங்கா, நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக இயக்க உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதிய 67 படங்களிலும் இவர் நடிப்பார் என ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

Priyanka Mohan

சில மாதங்களுக்கு முன்பு பிரியங்கா விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றிருந்தார். தற்போது லண்டனில் கிரீன்வீச்சில் இருந்து தனது சமீபத்திய படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன் சண்டே ஸ்ட்ரோல்ஸ்" என்று தலைப்பிடப்பட்டதால் அழகான நடிகை தனது  நாட்களை சற்று நீடித்துள்ளதாக தெரிகிறது. அங்கேயே  தங்கும் திட்டம் அவருக்கு இருக்கிறதா என்று சமூகவலைதளத்தில் கேள்வி எழும்பி வருகிறது. 

Latest Videos

click me!