the legend
லெஜெண்ட் சரவணன் அருள் நடித்துள்ள தி லெஜெண்ட் படம் ரிலீஸ் ஆக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது. அதன்படி படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித், விஜய் விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே அதிகாலை காட்சிப்படுத்தப்படும். அதேபோல சமீபகாலமாக தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்களின் படங்களுக்கும் அதிகாலை காட்சி உண்டு. ஆனால் சமீபத்தில் வெளியான சிம்புவின் மாநாடு படத்திற்கு அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டு இருந்தது.
the legend
இந்நிலையில் லெஜண்ட் சரவணன் அருளின் அறிமுகப்படமான தி லெஜெண்ட்க்கு அதிகாலை காட்சி கிடைத்திருப்பது வியப்பைஏற்படுத்தியுள்ளது. மேலும் இது படத்திற்கான சரியான ஓபனிங் ஆக இருக்கும் என பட குழு மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் சுமன், விஜயகுமார், லதா, மறைந்த சின்ன கலைவாணர் விவேக், யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...பாலிவுட் பிரபலம் கத்ரீனா ஃகைப் - விக்கி கௌசல் ஜோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலைகள் கடந்த சனிக்கிழமை ஹைதராபாத்தில் ரசிகர்களை படக்குழு சந்தித்தனர். பான் இந்தியா படமமாக வெளியாகவுள்ளதால் இந்தியா முழுவதும் பிரமோஷன் செய்ய வருகின்றனர். படத்தை சரவணன் அருள் தனது பேனரின் கீழ் தயாரித்துள்ளார்.
the legend
முன்னதாக தனது வணிக ஸ்தாபனத்தின் விளம்பரத்தின் மூலம் அறிமுகமானது இவர் தென்னிந்திய முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா உள்ளிட்டோருடன் தோன்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார். இதன் மூலம் பல விமர்சனங்களையும் பெற்றுக் கொண்டார் சரவணன் அருள். இருந்தும் எதற்கும் தளராத இவர் தற்போது தனது சொந்த தயாரிப்பில் நாயகனாக உருவெடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...அடுத்தடுத்து மண்ணை கவ்வும் பாலிவுட் படங்கள்..தொடர் தோல்வியால் துவண்டுள்ள சூப்பர் ஹீரோஸ்!
ஜேடி - ஜெரி என்னும் இருவர் இயக்கி உள்ள இது வெளிநாட்டில் இருந்து வரும் விஞ்ஞானி உள்ளூர் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்தான கதைகளத்தை கொண்டுள்ளது. அறிவியல் புனைக்கதை ஆக்சன் த்ரில்லராக தி லெஜண்ட் உருவாகியுள்ளது. முன்னதாக இவரது விளம்பரத்தில் நடித்ததனால் தென்னக நாயகிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் லெஜெண்டுக்கு ஜோடியாக நம்மூர் நாயகிகள் மறுத்து விடவே, பாலிவுட் நாயகி ஊர்வசி ரவுத்தேலா கதாநாயகியாக நடித்துள்ளார்.