இதற்கு இடையே ஒரு பிரபல நடிகை அமலாபாலை கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த நட்சத்திர தம்பதிகள் விவாகரத்து பெற்றனர். இதை அடுத்து இருவரும் அவரவர் பாதையில் சென்று விட்டனர்.ஏ.எல் விஜய் சமீபத்தில் மறுமணமும் செய்து கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு...கார்த்தி வெளியிட்ட ...சீதா ராமம் ட்ரைலர்..நாயகியை தேடும் ராஷ்மிகா..துல்கர் சல்மான்..
இவர் இறுதியாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் பாலிவுட் நாயகி கங்கனா நடித்திருந்தார். தற்போது இவர் குறித்த புதிய தகவலாக ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ள 'மெட்ராஸ் மர்டர்' என்னும் வெப் தொடரில் இணைந்துள்ளார். 1940 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் போது நடந்த ஒரு கொலையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் உருவாகியுள்ளது.