நட்சத்திர ஜோடிகளான உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் மகள் ஷாரிக்கின் திருமணம் கிருஸ்தவ முறைப்படி நடந்து முடிந்துள்ள நிலையில் இதுகுறித்த சில புகைப்படங்கள் வைரலாக வருகின்றன.
தமிழில், வின்னர், ஆலவந்தான் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரியாஸ் கான். இவர் பழம்பெரும் நடிகை கமலா காமேஷின் மகள், உமாவை காதலித்த நிலையில், இருவரும் திருமணமே செய்து கொள்ளாமல் பல வருடங்களாக லிவிங் ரிலேஷன் ஷிப் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
26
actor riyaz khan
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான், திருமணம் செய்து கொள்வதாக கூறி... ரியாஸ் கான் உமா கழுத்தில் தாலி கட்டினார் இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி படு வைரலாகியது.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், உமா - ரியாஸ் கானின் மூத்த மகன் ஷாரிக்... பெற்றோரை போலவே சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டிய நிலையில், பென்சில் என்கிற படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாத நிலையில், பிக்பாஸ் நிகஸ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க நினைத்தார்.
46
shariq
ஐஸ்வர்யா தத்தாவிடம் சில ரொமான்டிக் வசனங்கள் எல்லாம் பேசிய நிலையில்... பின்னர் 49-ஆவது நாளில் பிக்பாசில் இருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
தற்போது 29 வயதாகும் இவர் கிருஸ்தவ மதத்தை சேர்ந்த மரியா ஜெனிஃபர் என்கிற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இவர்களுக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி கிறிஸ்டியன் முறைப்படி திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த சில புகைப்படங்கள் வெளியாகி வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
66
shariq and mariya marriage
உமா ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவர், அதே போல் ரியாஸ் கான் முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவர். இப்போது இவர்களின் குடும்பத்தில் கிறிஸ்டியனும் இணைந்துள்ளது. இதன் மூலம் மும்மதமும் ஒன்றிணைந்த குடும்பமாக இந்த குடும்பம் மாறியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.