வெட்கத்தில் சிவந்த சோபிதா..வாரி அணைக்கும் நாக சைதன்யா - வெளியான கியூட் எங்கேஜ்மெண்ட் பிக்ஸ்!

நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலா ஜோடிக்கு நேற்றைய தினம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது அது தொடர்பான புகைப்படங்களை தம்பதியர் வெளியிட்டுள்ளனர்.

Naga Chaitanya Sobhita Dhulipala Engagement

தெலுங்கு சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான நாகசைத்தன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த 2017ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களது திருமண வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. 2021ம் ஆண்டு இருவரும் மனம் ஒத்து பிரிந்தனர். சமந்தாவை பிரிந்ததும் நாக சைதன்யாவின் கவனம் நடிகை சோபிதா துலிபாலா பக்கம் திரும்பியது.

Naga Chaitanya Sobhita Dhulipala Engagement

தொடக்க காலத்தில் இருவரும் நண்பர்களாகப் பழகத் தொடங்கிய நிலையில், இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் காதலித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. தொடர்ந்து இது தொடர்பான தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், இருவரும் 8ம் தேதி (வியாழன் கிழமை) நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.


Naga Chaitanya Sobhita Dhulipala Engagement

இது தொடர்பான புகைப்படத்தை நாக சைதன்யாவின் தந்தையும், நடிகருமான நாகார்ஜூனா பகிர்ந்து புதுமன தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற 8ம் தேதியில் தான் நாக சைதன்யா சமந்தாவிடம் தனது காதலை தெரிவித்தாராம். அதே தேதியில் நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Naga Chaitanya Sobhita Dhulipala Engagement

இந்நிலையில், நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை புதுமண தம்பதியர் தங்களது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Latest Videos

click me!