துப்பாக்கியுடன் மிரட்டும் விஜய்.. வெறித்தனமான போஸ்டருடன் வெளியான 'கோட்' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

First Published | Aug 9, 2024, 10:06 PM IST

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படத்தின் புதிய போஸ்டர்ரோடு ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.
 

Actor Thalapathy Vijay The GOAT Movie

தளபதி விஜய் தன்னுடைய 68வது திரைப்படமாக, 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. 'பிகில்' படத்திற்கு பின்னர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில், விஜய்யுடன் இணைந்து நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Goat Movie Songs:

சயின்டிஃபிக் கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து, இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கடந்த வாரம் வெளியான ஸ்பார்க் என்கிற மூன்றாவது பாடல் அதிக விமர்சனங்களுக்கு ஆளானது குறிபிடித்தக்கது.
 

Tap to resize

Audio Launch Update

அதே போல் கூடிய விரைவில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய போஸ்டர் உடன் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Goat Movie Release Date:

அதன்படி இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில்  சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். சுமார் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம், உலகளவில் விஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!