இதுக்காக தான் நாக சைதன்யா - சோபிதா ஜோடி 8.8.8 தேதியில் நிச்சயதார்த்தம் செய்தார்களா? இப்படி ஒரு காரணமா?

First Published | Aug 9, 2024, 5:55 PM IST

நாக சைதன்யா - சோபிதா ஜோடி ஏன் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Naga Chaitanya-Sobhita Dhulipala

நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் டேட்டிங் செய்து வருவதாக தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் இருந்த நிலையில் நேற்று இந்த ஜோடி தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஹைதாராபாத்தில் நேற்று நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா இதுதொடர்பான போட்டோக்களை பகிர்ந்து இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Naga Chaitanya Sobhita

இந்த நிச்சயதார்த்தம் நடந்த தேதியும், சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தா நாக சைதன்யாவுக்கு புரோபஸ் செய்த தேதியும் ஒரே தேதி தானாம்.. ஆனால் இது தற்செயலானதா?

Tap to resize

Naga Chaitanya Sobhita

நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் பற்றிய செய்தி இணையத்தில் வெளியானதும் பல ரசிகர்கள் இணையத்தில் இதுகுறித்து கருத்து பதிவிட்டு வந்தனர். சமந்தாவை பழிவாங்குவதற்கு வேண்டுமென்றே நாக சைதன்யா இவ்வாறு செய்துள்ளார் என்று சிலர் நினைத்தனர். ஆனால் சிலர் இது வெறும் ற்செயல் என்று நிராகரித்தனர். இருப்பினும், இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. காதல் ஜோடிகள் ஏன் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Naga Chaitanya Sobhita

8.8.8 ன் முக்கியத்துவம்

நேற்று 08.08.2024, அதாவது 8+8+ 2+0+2+4 + 8.8.8 என்ற வருகிறது. இந்த தேதி எண்கணிதம் மற்றும் ஜோதிடத்தில் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது, ஜோதிட ரீதியாக சக்திவாய்ந்த நிகழ்வாக கருதப்படும் லயன்ஸ் கேட் போர்டல் நேற்று தான் திறந்தது. ஆன்மீக பேச்சாளரான டாக்டர் நீதி கௌஷிக், இதுகுறித்து பேசிய போது, பூமியானது சிரியஸ் நட்சத்திரத்துடன் இணையும் போது லயன் கேட் போர்ட்டல் திறக்கப்படுகிறது., ​​தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான தனித்துவமான வாய்ப்பை உருவாக்குகிறது. வானத்தில் பிரகாசமான நட்சத்திரமான சிரியஸ் இந்த காலகட்டத்தில் ஆன்மீக ஆற்றலை அதிகரிக்கிறது என்று கூறினார்.

Actor Naga Chaitanya And Shobhita Dhulipala

ஜோதிட ரீதியில் முக்கியத்துவம் இந்த சிறப்பு நாளில் நாக சைதன்யா - சோபிதாவின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Naga Chaitanya Samantha

முன்னதாக நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். எனினும் இந்த திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2021-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

Naga Chaitanya Sobhita

சமந்தாவை பிரிந்த அடுத்த ஆண்டு நாக சைதன்யா சோபிதா உடன் பழக தொடங்கினார். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இருவரும் காதலர்களாக மாறினர். இருவரும் சில மாதங்கள் டேட்டிங் செய்த நிலையில் தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இந்த ஜோடியின் திருமண தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Latest Videos

click me!