நடிகர் சூர்யாவுக்கு படப்பிடிப்பில் மண்டை உடைந்தது! வெளியான அதிர்ச்சி தகவல்!

Published : Aug 09, 2024, 04:38 PM IST

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 படபிடிப்பில் சண்டை காட்சியின் போது, நடிகர் சூர்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக தற்போது வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

PREV
14
நடிகர் சூர்யாவுக்கு படப்பிடிப்பில் மண்டை உடைந்தது! வெளியான அதிர்ச்சி தகவல்!
suriya 44 shoot

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவை வைத்து அவர் நடிக்கும் 44-வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சூர்யா - ஜோதிகா இருவரும் இணைந்து, 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர். 
 

24
suriya 44 movie character

ஏற்கனவே இந்த படத்தின் கிலிம்ஸி வீடியோ, நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது. மேலும் கங்குவா படத்திற்கு பின்னர் சூர்யா இதுவரை நடித்திராத ஒரு மாஸானா கேங் ஸ்டார் கேரக்டரில் நடித்து வருகிறார்.

உனக்கென்ன அங்க வேலை..! திரிஷாவை கண்டபடி திட்டினாரா விஜய்யின் அம்மா ஷோபா? கொளுத்தி போட்ட பயில்வான்!

34
Suriya 44 shooting in ooty

ஆனால் இந்த கதாபாத்திரம் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை பீட் பண்ணுமா? என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் சிலர் முன்வைத்து வருகிறார்கள். அதே நேரம் இப்படத்தின் தோற்றம் சூர்யாவின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மாலத்தீவில் எடுக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 26-ஆம் தேதி முத்த ஊட்டியில் நடந்து வருகிறது.
 

44
suriya injured in head

சூர்யா, வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது, நடிகர் சூர்யாவின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும்... இதனால் அவருக்கு ரத்தம் கொட்டவே, உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு முதலுதவி சிகிச்சை செய்த படக்குழுவினர் பின்னர் சூர்யாவை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தன. சூர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நலமாக உள்ளதாகவும், சில நாட்கள் ஓய்வெடுத்த பின்னர் திரைப்பட பணியில் ஈடுபடலாம் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

நான் சிங்கிளா இருக்கேன்னு யார் சொன்னா? வாய்விட்டு மாட்டிக்கொண்ட கீர்த்தி சுரேஷ் - யார லவ் பண்றாங்க தெரியுமா?

 

 

 

 

 

 

 

 

 

 

 

Read more Photos on
click me!

Recommended Stories