கோலிவுட் திரையுலகின் உச்ச நடிகராக இருப்பவர் தளபதி விஜய். ஒரு படத்திற்கு ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரை சம்பளமாக வாங்கும் விஜய், நடிப்பை தொடர்ந்து அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அரசியல் களத்தில் இறங்க ஆயத்தமாகிவிட்ட விஜய், கைவசம் உள்ள தளபதி 69 திரைப்படத்தில் நடித்து முடித்த பின்னர் முழுமையாக அரசியல்வாதியாக மாற உள்ளார்.