"எங்களுக்காக ஒரு உயிர் வரப்போகுது" எமோஷனலான ரியாலிட்டி ஷோ.. ரோபோ சங்கரை தாத்தாவாக மாற்றிய இந்திரஜா!
Indraja Robo Shankar : கடந்த மார்ச் மாதம் பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கும், அவரது உறவினர் கார்த்திக்கும் மதுரையில் திருமணம் நடந்து முடிந்தது.
robo shankar
தமிழ் திரையுலகில் இப்பொழுது மிகச் சிறந்த குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றாலும் கூட, மேடை நாடகங்களில் தனது பயணத்தை தொடங்கி பல கஷ்டங்களை அனுபவித்து உயர்ந்தவர் தான் ரோபோ சங்கர்.
"பாத்து உங்க பையன் கோச்சுக்க போறாரு.. பேர்லே மானேவின் மகனை கொஞ்சும் அமலா பால் & ஜகத் - வைரல் பிக்ஸ்!
bigil
அவருடைய மூத்த மகள் இந்திரஜா சங்கர், கடந்த 2019ம் ஆண்டு தமிழில் வெளியான விஜயின் "பிகில்" திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை துவங்கினார். அதற்கு முன்னதாக சில சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
indraja karthick
கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் அவரது உறவினர் கார்த்தியை, இந்திரஜா சங்கர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய திருமணம் கோலாகலமாக பெரிய அளவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
indraja shankar
தற்பொழுது இந்த ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வரும் நிலையில் ஒரு மகிழ்ச்சிகரமான விஷயத்தை அவர்கள் வெளியிட்டிருக்கின்றனர். இந்திரஜா கர்பமாக உள்ள நிலையில், தான் தாத்தா ஆகிவிட்டதாக கூறி மகிழ்ச்சியடைந்துள்ளார் ரோபோ சங்கர். மேலும் இந்திரஜாவுக்கு சடங்குகளை நடத்தி அழகுபார்த்துள்ளது விஜய் டிவி.
நாக சைதன்யா - ஷோபிதா நிச்சயதார்த்த நாளில்... சமந்தாவின் இதயம் நொறுங்கும் இமோஜியுடன் போட்ட பதிவு!