Vidaamuyarchi Poster : ஸ்டைலிஷ் வில்லனாக ஆரவ்... விடாமுயற்சி படக்குழு வெளியிட்ட மாஸ் போஸ்டர்

Published : Aug 09, 2024, 02:50 PM IST

விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ஆரவ்வின் மிரட்டலான போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

PREV
14
Vidaamuyarchi Poster : ஸ்டைலிஷ் வில்லனாக ஆரவ்... விடாமுயற்சி படக்குழு வெளியிட்ட மாஸ் போஸ்டர்
vidaamuyarchi

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் வில்லன்களாக ஆரவ், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை ரெஜினாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

24
vidaamuyarchi Ajith

விடாமுயற்சி திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விடாமுயற்சி திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை அஜர்பைஜான் நாட்டில் படமாக்கி உள்ளனர். எஞ்சியுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... இப்பவும் சமந்தா என்னுடைய மகள் தான்... நாக சைதன்யாவுக்கு முன்பே சோபிதாவை எனக்கு தெரியும் - நாகார்ஜுனா ஓபன் டாக்

34
VidaaMuyarchi Arjun

நடிகர் அஜித் விடாமுயற்சி மட்டுமின்றி குட் பேட் அக்லி படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். ஒரு நாளைக்கு சுமார் 21 மணிநேரம் அஜித் பணியாற்றுகிறாராம். காலையில் விடாமுயற்சி, மாலையில் குட் பேட் அக்லி என பம்பரமாய் சுழன்று வருகிறாராம் ஏகே. இன்னும் ஒரு சில வாரங்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளார்களாம்.

44
vidaamuyarchi poster for Arav

இது ஒருபுறம் இருக்க விடாமுயற்சி படத்தின் அப்டேட்டும் வார வாரம் வெளிவந்த வண்ணம் உள்ளது. கடந்த வாரம் அஜித்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, தற்போது விடாமுயற்சி படத்தின் மற்றொரு வில்லனாக ஆரவ்வின் போஸ்டரை வெளியிட்டு உள்ளனர். அந்த போஸ்டரில் காரில் இருந்து கூலிங் கிளாஸ் உடன் செம்ம மாஸாக இறங்கும் படியான புகைப்படம் இடம்பெற்று உள்ளது. அந்த போஸ்டருக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... Bigg Boss Tamil : அடுத்த பிக்பாஸ் யார்? கமல் விலகலுக்கு பின் விஜய் டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories