இப்பவும் சமந்தா என்னுடைய மகள் தான்... நாக சைதன்யாவுக்கு முன்பே சோபிதாவை எனக்கு தெரியும் - நாகார்ஜுனா ஓபன் டாக்

Published : Aug 09, 2024, 01:39 PM IST

நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், அவரின் தந்தை மகனின் இரண்டாவது திருமணம் பற்றி பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

PREV
14
இப்பவும் சமந்தா என்னுடைய மகள் தான்... நாக சைதன்யாவுக்கு முன்பே சோபிதாவை எனக்கு தெரியும் - நாகார்ஜுனா ஓபன் டாக்
naga chaitanya, sobhita Dhulipala

நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார். அவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து, இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். பின்னர் மகனின் இரண்டாம் திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாகார்ஜுனா வெளியிட்டார்.

24
naga chaitanya, sobhita Dhulipala Engagement

இந்த நிலையில் மகனின் நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் நடிகர் நாகார்ஜுனா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அதை பார்க்கலாம். நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தத்தில் அவரின் அம்மா, என்னுடைய மனைவி அமலா, நான் மற்றும் சோபிதாவின் பெற்றோர், தங்கை ஆகியோர் மட்டுமே கலந்துகொண்டனர். நட்சத்திரப்படி நல்ல நாளாக இருந்ததால் தான் ஆகஸ்ட் 8ந் தேதி நிச்சயதார்த்தத்தை வைத்தோம். மற்றபடி அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. என் மகனின் முகத்தில் மீண்டும் சந்தோஷத்தை பார்ப்பதால் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இதையும் படியுங்கள்... சோபிதா துலிபாலாவை விட 20 மடங்கு அதிக சொத்துக்கு அதிபதியாக இருக்கும் நாக சைதன்யா! இருவரின் Net Worth இதோ

34
Nagarjuna about Naga Chaitanya Engagement

சமந்தா உடனான பிரிவுக்கு பின்னர் நாக சைதன்யா மிகவும் மன உளைச்சலில் இருந்தான். அவன் யாரிடமும் தன்னுடைய பீலிங்ஸை காட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் எனக்கும் தெரியும் அவன் அப்போது சந்தோஷமாக இல்லை என்று. அதேநேரத்தில் நாக சைதன்யா உடனான உங்களது உறவு இன்னும் தொடர்கிறதா என்கிற கேள்விக்கு, ஆம் அதில் எந்தவித மாற்றமும் இல்லை. இப்போது அவரை நான் என் மகளாக தான் பார்க்கிறேன் என பதிலளித்தார்.

44
Nagarjuna says about sobhita Dhulipala

இதைத்தொடர்ந்து தனது வருங்கால மருமகள் சோபிதா பற்றி பேசிய நாகார்ஜுனா, நான் ஒன்று சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள், நாக சைதன்யாவுக்கு முன்னரே எனக்கு சோபிதாவை தெரியும். என் மகனுக்கு அவரை 2 ஆண்டுகளாக தான் தெரியும். ஆனால் எனக்கு சோபிதாவை 6 வருடங்களாக தெரியும். நான் கோடாச்சாரி படத்திலேயே சோபிதாவின் நடிப்பை பார்த்து வியந்து அவரை பாராட்டி இருக்கிறேன். திருமணம் எப்போது என்கிற கேள்விக்கு, விரைவில் நடக்கும், ஆனால் உடனடியாக அல்ல என பதிலளித்தார் நாகார்ஜுனா.

இதையும் படியுங்கள்... படப்பிடிப்பில் அழுத அமலா.. நாகார்ஜுனா செய்த உருக்கமான செயலால் உருகிய இதயம்.. க்யூட் லவ் ஸ்டோரி..

Read more Photos on
click me!

Recommended Stories