பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தமிழில் ரகு தாத்தா படமும், இந்தியில் பேபி ஜான் படமும் தயாராகி உள்ளது. இந்த இரண்டு படங்களுமே ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதில் ரகு தாத்தா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் அவர் நடித்துள்ள முதல் இந்தி படமான பேபி ஜான் வருகிற டிசம்பர் மாத இறுதியில் திரைக்கு வருகிறது.
24
Keerthy suresh interview
ரகு தாத்தா படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால், அப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்படி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் காதல் பற்றியும் மனம்விட்டு பேசி இருக்கிறார் கீர்த்தி. அதில் தொகுப்பாளினி, என்றாவது தனியாக இருக்கிறோமே என ஃபீல் பண்ணி இருக்கிறீர்களா என்கிற கேள்வியை முன்வைத்தார். இதற்கு கீர்த்தி சுரேஷ் அளித்த பதில் தான் ஹைலைட்டாக பேசப்படுகிறது.
அதன்படி, நான் சிங்கிளா இருக்கேன்னு சொல்லவே இல்லையே என கீர்த்தி சுரேஷ் சொன்னதை கேட்டு தொகுப்பாளினியே சற்று வாயடைத்துப் போனார். பின்னர் ரிலேஷன்ஷிப் எதிர்பார்ப்புகள் பற்றி பேசிய அவர் என்னை லவ் பண்ணுவது மட்டுமின்றி இருவரும் நல்ல நண்பர்களாவும் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என பேசினார். தற்போது தான் பர்சனலாகவும், புரபஷனலாகவும் மிகவும் ஹாப்பியாக இருப்பதாக கீர்த்தி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
44
keerthy suresh says she is not single
இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ கீர்த்தி சுரேஷ் யாரை காதலித்து வருகிறார் என்று வலைவீசி தேடத் தொடங்கி உள்ளனர். அடிக்கடி கீர்த்தி சுரேஷ் பற்றிய காதல் செய்திகள் இணையத்தில் பரவுவதுண்டு, பின்னர் அதெல்லாம் வதந்தி என கூறிவிடும் கீர்த்தி, தற்போது தான் சிங்கிளாக இல்லை என கூறி இருப்பதால் மீண்டும் கீர்த்தியின் காதல் பற்றிய செய்திகள் அதிகளவில் வெளிவந்த வண்ணம் உள்ளன. சிலரோ அவர் குடும்பத்துடன் இருப்பதை தான் அவ்வாறு சொல்லி இருப்பார் என கூறி வருகின்றனர்.