படப்பிடிப்பில் அழுத அமலா.. நாகார்ஜுனா செய்த உருக்கமான செயலால் உருகிய இதயம்.. க்யூட் லவ் ஸ்டோரி..

First Published | Aug 9, 2024, 10:32 AM IST

90களில் பிரபலமாக இருந்த நாகார்ஜுனா - அமலா ஜோடி தற்போது பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர். இந்த தம்பதியின் காதல் கதை குறித்து தற்போது பார்க்கலாம்.

Nagarjuna Amala Love story

திரையில் ஜோடியாக நடிக்கும் பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட் ரியல் ஜோடிகளாகவும் மாறுகின்றனர். அந்த வகையில் 90களில் பிரபலமாக இருந்த நாகார்ஜுனா - அமலா ஜோடி தற்போது பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர். இந்த ஜோடியின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது. அதே நேரம் திரைக்கு பின்னால் இருவருக்கும் இடையே மலர்ந்த காதலும் ரசிகர்களை ஈர்த்தது. சக நடிகர்கள் முதல் கணவன் மனைவி வரையிலான நாகார்ஜுனா - அமலாவின் காதல் கதை குறித்து தற்போது பார்க்கலாம்.

Nagarjuna Amala Love story

நாகார்ஜுனா அமலாவைச் சந்திப்பதற்கு முன்பு, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்கள் இருந்தன. ஆம். நாகார்ஜுனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்தார். நாகார்ஜுன 1984-ம் ஆண்டு லட்சுமி டக்குபதியை திருமணம் செய்தார், இது தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய திரைப்படக் குடும்பங்களை இணைத்த திருமணமாகும்.. இந்த தம்பதிக்கு 1986 -ம் ஆண்டு பிறந்த மகன் தான் நாக சைதன்யா.

Tap to resize

Nagarjuna Amala Love story

எனினும் நாகார்ஜுன லட்சும்யின் திருமண உறவு பல சிரமங்களை சவால்களையும் எதிர்கொண்டது. இதனால் 1990-ம் ஆண்டு இருவரும் விவாவரத்து செய்து பிரிந்து விட்டனர். இந்த சவாலான நேரத்தில் நாகார்ஜுனா தனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்திய நாகார்ஜுனா பல படங்களில் நடித்து வந்தார். 

Nagarjuna Amala Love story

அப்போது தன் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது நாகார்ஜுனா அமலாவை சந்திக்கும் சூழல் உருவானது.. தனது கைவினைப்பொருளுக்கான கருணை மற்றும் அர்ப்பணிப்புக்காக அறியப்பட்ட அமலா, விரைவில் நாகார்ஜுனாவின் கவனத்தை ஈர்த்தார். இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்தனர். இருவருக்கும் இடையே ஆழமான நட்பு உருவானது.

Nagarjuna Amala Love story

அமலாவின் நேரம் தவறாமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை நாகார்ஜுனாவுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒருக்கட்டத்தில் அமலாவை காதலிக்க தொடங்கி உள்ளார் நாகார்ஜுனா. அப்போது நாகார்ஜுனா ஒரு எளிய செயல் மூலம் அமலாவின் இதயத்தை வென்றார். ஆம். நாகார்ஜுனாவும் அமலாவும் ஒரு படப்பிடிப்பில் இருந்துள்ளனர்.

Nagarjuna Amala Love story

அப்போது ​​அமலா குறிப்பிட்ட உடையில் அசௌகரியமாக உணர்ந்ததாக கூறப்படுகிறது, அதனால் அவர் தனது வேனில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அமலா அழுவது குறித்து கேள்விப்பட்ட நாகார்ஜுனா நேரில் சென்றதும் அவரின் நிலைமையைப் புரிந்துகொண்டார். அமலாவின் அசௌகரியத்தை அறிந்ததும், இயக்குனரிடம் பேசி உடையை மாற்றிக் கொள்ளலாம் என்று அவரிடம் உறுதியளித்தார். நாகார்ஜுனாவின் இந்த கருணை மற்றும் புரிதல் ஆகியவற்றால் அமலாவின் இதயம் உருகி உள்ளது. இதுவே அவர்கள் காதலுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது.

Nagarjuna Amala Love story

1991-ம் ஆண்டில், அமெரிக்காவுக்கு பயணம் சென்ற போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று புரபோஸ் செய்து அமலாவை ஆச்சர்யப்படுத்தி உள்ளார் நாகார்ஜுனா. அந்த புரபோசலை சற்றும் எதிர்பாராத அமலா ஆச்சர்யத்தில் உறைந்தார். மேலும் உற்சாகத்துடனும் சற்று நடுக்கத்துடனும், நாகார்ஜுனாவின் புரபோசலை ஏற்றுக்கொண்டதாக அமலாவே இந்த இனிமையான சம்பவத்தை நினைவுகூர்ந்தார். இதை தொடர்ந்து 1992-ம் ஆண்டு நாகார்ஜுனாவும் அமலாவும் சென்னையில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர், இதில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Nagarjuna Amala Love story

இருவரும் திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதிலும், மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தங்கள் மகன் அகில் அக்கினேனியை வரவேற்றனர். இன்று, நாகார்ஜுனா மற்றும் அமலாவின் காதல் கதை பரஸ்பர மரியாதை, புரிதல் மற்றும் அன்பின் சக்திக்கு சான்றாக நிற்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..

Latest Videos

click me!