இரண்டே வாரத்தில் குளோஸ் ஆன தனுஷின் ஆட்டம்.. தியேட்டரில் இருந்து ஓடிடிக்கு தாவிய ராயன் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

First Published | Aug 9, 2024, 7:55 AM IST

தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்திருந்த ராயன் திரைப்படம் தியேட்டரில் சக்கைப்போடு போட்ட நிலையில், அதன் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

Raayan

தமிழ் திரையுலகில் தரமான நடிகராக வலம் வருபவர் தனுஷ். ஹீரோவாக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமையாளராக ஜொலித்து வருகிறார் தனுஷ். இவர் இயக்கத்தில் முதலில் பா.பாண்டி திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதைத் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த தனுஷ், ராயன் படம் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கினார். இது தனுஷின் 50வது படமாகும். 

Raayan Dhanush

ராயன் படத்தில் தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். படத்தின் இடம்பெற்ற மூன்று பாடல்களும் வேறலெவலில் ஹிட்டாகி உள்ளன. குறிப்பாக அடங்காத அசுரன் மற்றும் வாட்டர் பாக்கெட் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.

இதையும் படியுங்கள்... "எங்களுக்காக ஒரு உயிர் வரப்போகுது" எமோஷனலான ரியாலிட்டி ஷோ.. ரோபோ சங்கரை தாத்தாவாக மாற்றிய இந்திரஜா!

Tap to resize

Raayan Movie Box Office

ராயன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூலை 26-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூலை ஒரே வாரத்தில் தாண்டி மாஸ் காட்டியது ராயன். தற்போது இரண்டு வாரங்களில் ராயன் திரைப்படம் ரூ.126 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது. இப்படத்தின் வசூல் வேட்டைக்கு ஆப்பு வைக்க இந்த வாரம் பிரசாந்தின் அந்தகன் படம் ரிலீஸ் ஆகி உள்ளது.

Raayan OTT Release Update

இதனால் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட ராயன் திரைப்படம் அடுத்ததாக ஓடிடி ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 30-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ராயன் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்கை போல் ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னும் ராயன் படம் வசூலில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Andhagan Review : மீண்டும் டாப் ஸ்டாராக கம்பேக் கொடுத்தாரா பிரசாந்த்? அந்தகன் படத்தின் விமர்சனம் இதோ

Latest Videos

click me!