டீப் நெக் உடையில்... தங்கம் போல் மின்னும் ராஷ்மிகா! பெண்ணை... தேவதையா.. என கன்ஃபியூஸ் ஆகும் ரசிகர்கள்!

First Published | Aug 8, 2024, 10:35 PM IST

நடிகை ராஷ்மிகா, தங்க மங்கையாக மாறி... ஜொலிக்கும் உடையில் டீப் நெக் கவர்ச்சியில் விதவிதமாக போஸ் கொடுத்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
 

ஒவ்வொரு முறையில், தன்னுடைய நேர்த்தியான அலங்காரத்தாலும், அழகாலும் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ராஷ்மிகா மந்தனா வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்த பெண் என்றாலும், இவருக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால், கடந்த 2016ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான, ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக 'க்ரிக் பார்ட்டி' என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

Unseen புகைப்படங்களை வெளியிட்டு கணவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய நஸ்ரியா! வைரலாகும் போட்டோஸ்!

Tap to resize

இந்த படத்தில் நடிக்கும் போது, ரக்ஷித் ஷெட்டியுடன் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. எனவே இருவரும் தங்களின் உறவை திருமண நிச்சயதார்த்தம் வரை கொண்டு சென்ற நிலையில், அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

குறிப்பாக தெலுங்கியில், விஜய் தேவார கொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து ரக்ஷித் ஷெட்டிக்கும், ராஷ்மிகாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடை தொடர்ந்து இருவருமே தங்களின் திருமணத்தை ரத்து செய்தனர். இந்த திருமணத்தை நிறுத்தியதால், பல கன்னட ரசிகர்களின் கோவத்திற்கும் ஆளானார் ராஷ்மிகா.

TRP ரேட்டிங்கில் விஜய் டிவி - சன் டிவிக்கு இடையே நடக்கும் கடுமையான போட்டி இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ!

ரக்ஷித் ஷெட்டியுடன், தன்னுடைய காதலை முறித்து கொண்ட பின்னர் விஜய் தேவரகொண்டாவை இவர் காதலிப்பதாக பல தகவல்கள் உலா வருகின்றன. சில சமயங்களில் இவர்கள் டேட்டிங் செய்யும் இடத்தில் இருந்து வெளியிடும் புகைப்படங்களும் வைரலாகிவிடும். ஆனால் தங்களுக்குள் காதல் என்பது இல்லவே இல்லை என தொடர்ந்து கூறி வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டாவுடன் காதல், டேட்டிங் போன்ற சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், நடிப்பில் முழு ஆர்வம் காட்டி வருகிறார். தமிழில் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்த வாரிசு கலவையான விமர்சனத்தை பெற்றாலும், ஹிந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்த, அனிமல் விமர்சனங்களை தாண்டி வெற்றிபெற்றது.

வாழ்க்கையில் இரண்டு... மூன்று காதல் வந்தால் என்ன தப்பு? ரசிகரின் கேள்விக்கு டிடியின் நச் விளக்கம்!

தற்போது பாலிவுட் திரையுலகிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் ராஷ்மிகா... ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாக, வெள்ளை நிற உடையில் ஜொலிக்கும் தேவதையாக மாறி எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ராஷ்மிகாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நேர்த்தியான அழகால், டீப் நெக் கவர்ச்சியில் இளம் நெஞ்சங்களை கொஞ்சம் கிளுகிளுப்பாக்கி உள்ளார் ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் ஸ்பெஷல்..'வேட்டையன்' படப்பிடிப்பில் 2 சூப்பர் ஸ்டாருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பகத் ஃபாசில்

Latest Videos

click me!