இந்த சீரியலுக்கு அடுத்த படியாக TRP லிஸ்டில், 6.79 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தை கைப்பற்றி உள்ளது 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல். தங்க மயில் செய்த காரியத்தால், கதிர் மற்றும் சரவணன் சிக்க போகும் நிலையில் இதனை அவர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதை தொடர்ந்து, சன் டிவியின் கூடிய விரைவில் முடிவுக்கு வர உள்ள சுந்தரி சீரியல் மிகவும் பின் தங்கி 7.16 TRP புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடைசி இடத்தில், சின்ன மருமகள் சீரியல் 5.77 TRP புள்ளிகளுடன் உள்ளது. தமிழ் செல்விக்கு எதிராக விரிக்கப்பட்ட வலையில்... அவள் சிக்குவாளா? என்ன நடக்க போகிறது என்பது இந்த சீரியல் மீதான பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது.