நாக சைதன்யாவின் முதல் மனைவி சமந்தா இல்லயாம்.. யார் தெரியுமா? அவங்களே சொன்ன தகவல்..

Published : Aug 08, 2024, 05:10 PM IST

நடிகை சமந்தா நாக சைதன்யாவின் முதல் மனைவி யார் என்று கூறிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
15
நாக சைதன்யாவின் முதல் மனைவி சமந்தா இல்லயாம்.. யார் தெரியுமா? அவங்களே சொன்ன தகவல்..

சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கு இன்று ஹைதராப்பாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதுதொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை சமந்தா நாக சைதன்யாவின் முதல் மனைவி யார் என்று கூறிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

25

2019-ம் ஆண்டு பேட்டியளித்த சமந்தா இதுகுறித்து பேசி இருந்தார். அப்போது நாக சைதன்யா "தனது தலையணையைத் திருமணம் செய்துகொண்டார்" என்று சமந்தா நகைச்சுவையாக கூறினார்.. சைதன்யாவுக்கு முதல் மனைவி தலையணை தான் என்று கூறி சிரித்தார்.

35

மேலும் “ அவரை நான் முத்தமிட வேண்டியிருந்தாலும், தலையணை எப்போதும் எங்களுக்கு இடையே இருக்கும்.” என்று கூறியிருந்தார். மேலும் தங்கள் திருமணத்திற்கு முன்பே இருவரும் லிவ் இன் உறவில் இருந்ததாகவும் சமந்தா கூறியிருந்தார்.

45

2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் அக்டோபர் 2021 இல் பிரிந்ததாக அறிவித்தனர். இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் பரஸ்பர மரியாதை கொடுத்து வருகின்றனர். சமந்தாவை பிரிந்த பிறகு, நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் செய்வதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது. 

 

55

எனினும் நாக சைதன்யாவோ அல்லது சோபிதாவோ தங்களின் உறவு நிலை குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், அவர்கள் ஒன்றாக இணைந்த படங்கள் பல்வேறு ஊகங்களை தூண்டியது. இந்த சூழலில் இந்த ஜோடி இன்று நிச்சயதார்த்தம் செய்து தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராகி உள்ளனர். நாக சைதன்யா - சோபிதா திருமணம் எப்போது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!

Recommended Stories