முதலில் ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க மறுத்த சூர்யா.. அப்புறம் எப்படி விக்ரம் படத்தில் நடித்தார் தெரியுமா?

First Published | Aug 8, 2024, 4:40 PM IST

விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், முதலில் அந்த கேரக்டரில் நடிக்க சூர்யா மறுத்தார் என்று உங்களுக்கு தெரியுமா?

vikram movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் அனைவரின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் சூர்யாவின் நடிப்பு திரையுலகினரால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. ஆனால் முதலில் ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க சூர்யா மறுத்தார் என்று உங்களுக்கு தெரியுமா?

Rolex Suriya

ஆம். முதலில் லோகேஷ் கனகராஜ் சூர்யாவிடம் ரோலக்ஸ் கேரக்டர் பற்றி கூறும் போது சூர்யா அதில் நடிக்க தயங்கினாராம். பின்னர் கமல் தான் அந்த கேரக்டரில் சூர்யா நடிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினாராம். அதன்பின்னரே அந்த கேரக்டரில் நடிக்க சூர்யா ஓ.கே சொன்னாராம்.

Tap to resize

சூர்யாவே இதுகுறித்து ஒருமுறை பேசி இருந்தார். அப்போது பேசிய அவர் “ இன்று நான் என்னவாக இருந்தாலும், வாழ்க்கையில் என்ன செய்தாலும் சரி,. கமல் சார் எப்போதும் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர் போன் செய்து ஒரு வாய்ப்பு இருப்பதாகச் சொன்னபோது, ​​நான் அந்த வாய்ப்பை கைவிட விரும்பவில்லை. நான் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. நீங்கள் எப்போது பயப்படுகிறீர்களோ, அப்போது நீங்கள் அதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று அர்த்தம்.  இது கடைசி நிமிட முடிவு. நான் லோகேஷ்க்கு போன் செய்து ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்கவில்லை என்று சொல்ல நினைத்தேன்.. ஆனால் நான் அதை ஒரு மனிதனுக்காக செய்தேன்.” என்று தெரிவித்தார்.

விக்ரம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தான் ரோலக்ஸ் வருவார். ஆனால் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் தனது அபாரமான நடிப்பினர் ரசிகர்களின் பாராட்டை சூர்யா. விக்ரம் அடுத்த பாகத்தில் சூர்யா அதே ரோலக்ஸ் கேரக்டரில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

vikram rolex

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்தது. 100 நாட்களுக்கு மேல் ஓடிய விக்ரம் படம் 2022-ம் ஆண்டின் அதிக வசூல் செய்த படமாக உருவெடுத்தது. இந்த படம் உலகளவில் ரூ 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா  கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான இந்த படத்தில் பாபி தியோல், திஷா பதானி, ஜெகபதி பாபு, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!