கவர்ச்சி குயினாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்! மோசமான கிளாமர் உடையில்.. இணையத்தை பற்றி எரிய வைத்த போட்டோஸ்!

First Published | Aug 8, 2024, 5:09 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்... இதுவரை இல்லாத வகையில் தூக்கலான கவர்ச்சி உடையில், எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, திரையுலகில் நிலையான ஹீரோயின் என்கிற இடத்தை பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் அப்படிப்பட்ட இடத்தை அடைய பல்வேறு சவால்களைக் கடந்து இன்று தென்னிந்திய திரை உலகில், அனைவராலும் அறியப்பட்ட ஹீரோயினாக மாறி உள்ளவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தன்னுடைய சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு திரை உலகில் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், பின்னர் 'அசத்தப்போவது யாரு' என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதன் பின்னர் 'மானாட மயிலாட' என்கிற டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, டைட்டில் வின்னராக மாறினார்.

பிறந்தநாள் ஸ்பெஷல்..'வேட்டையன்' படப்பிடிப்பில் 2 சூப்பர் ஸ்டாருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பகத் ஃபாசில்

Tap to resize

இதைத் தொடர்ந்து தீவிரமாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த இவருக்கு, இந்திரசேனா, நீதானா அவன், அவர்களும் இவர்களும், உயர்திரு 420, சட்டப்படி குற்றம், போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சின்ன வாய்ப்பாக இருந்தாலும் மன நிறைவுடன் அந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்த இவருக்கு, இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படம் ஒரு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது. 

இதன் பின்னர் புத்தகம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு.. 'காக்கா முட்டை' திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. 

40 வயதை நெருங்கினாலும்... 20 வயது ஹீரோயின் போல் இருக்கும் நடிகை நயன்தாராவின் பிட்னஸ் மற்றும் டயட் சீக்ரெட்!

தற்போது தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான ஃபர்ஹானா திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதை பெற்றார். தற்போது கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க, போன்ற தமிழ் படங்களிலும் இரண்டு மலையாள படங்கள் மற்றும் ஒரு கன்னட திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவவ்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் நிலையில், தற்போது கூடுதல் கவர்ச்சியுடன் மோசமான கிளாமர் உடையில் எடுத்து கொண்ட போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தாவை விட இளையவர் சோபிதா.! அடேங்கப்பா இத்தனை வயசு வித்தியாசமா?

Latest Videos

click me!