தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ள அந்தகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.

டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் அந்தகன். இப்படத்தை அவரின் தந்தை தியாகராஜன் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரசாந்த் உடன் பிரியா ஆனந்த், சிம்ரன், வனிதா விஜயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, சமுத்திரக்கனி, நவரச நாயகன் கார்த்திக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அந்தகன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான அந்தாதூண் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த அந்தகன் திரைப்படம். ஸ்ரீராம் ராகவன் என்பவர் தான் இந்தியில் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் பாலிவுட்டில் சக்கைப்போடு போட்டதோடு, இப்படத்திற்கு சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த நடிகர் ஆகிய மூன்று தேசிய விருதுகளையும் வென்று அசத்தியது.

இதையும் படியுங்கள்... அந்தகன் முதல் மின்மினி வரை.. இந்த வாரம் தியேட்டர் மற்றும் OTT ரிலீசுக்காக வரிசைகட்டி நிற்கும் படங்களின் லிஸ்ட்

இப்படத்தின் கதையை பொறுத்தவரை, பார்வையற்றவராக இருக்கும் படத்தின் நாயகன் எப்படியாவது லண்டன் சென்று மிகப் பெரிய பியானோ கலைஞனாக வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்கு ஏற்றார் போல ஒரு விபத்தின் மூலம் அவருக்கு காதலி கிடைக்கிறாள். காதலி வந்த பின் அவரது வாழ்வில் நடக்கக்கூடிய அடுத்தடுத்த சம்பவங்கள் தான் படமே. சிம்பிளான கதையாக இருந்தாலும் அதை தன்னுடைய விறுவிறுப்பான திரைக்கதையால் பிரம்மிப்பூட்டி இருந்தார் ஸ்ரீராம் ராகவன். அதே பிரம்மிப்பை தமிழிலும் ஏற்படுத்தினார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அந்தகன் படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.

அந்தகன் அந்தாதூன் படத்தோட சிறந்த ரீமேக்கா இருக்கு. பிரசாந்த் சாரிமிங்காக இருக்கிறார், சிறப்பாகவும் நடித்திருக்கிறார். சிம்ரன் பர்பார்மன்ஸ் செம்ம. சந்தோஷ் நாராயணன் தான் படத்தோட ரெண்டாவது ஹீரோ என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அந்தாதூன் படம் பார்க்கும்போது கிடைத்த திகில் மற்றும் இனிமையான தருணங்களை அந்தகன் படத்திலும் வெற்றிகரமாக கொடுத்துள்ளனர். பிரசாந்தின் நடிப்பு டாப் கிளாஸ். சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் என்பதால் கண்டிப்பாக பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அந்தகன் படம் மெரிட்டில் பாஸ் பண்ணி இருக்கிறது. இது ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ஆடியன்ஸுக்கு தேவையானவற்றையும் சேர்த்து கொடுத்துள்ளனர். பிரசாந்தின் நடிப்பு அருமை வாழ்த்துக்கள் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

துவண்டு போய் கிடந்த தமிழ் சினிமாவை காப்பாற்ற அந்தகன் வந்துவிட்டதாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…
Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... நாக சைதன்யா - ஷோபிதா நிச்சயதார்த்த நாளில்... சமந்தாவின் இதயம் நொறுங்கும் இமோஜியுடன் போட்ட பதிவு!