நாக சைதன்யா - ஷோபிதா நிச்சயதார்த்த நாளில்... சமந்தாவின் இதயம் நொறுங்கும் இமோஜியுடன் போட்ட பதிவு!

First Published | Aug 8, 2024, 11:17 PM IST

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், சமந்தா போட்ட பதிவு கவனிக்கப்பட்டுள்ளது.
 

நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் கிட்ட தட்ட 8 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கோவாவில் நடந்த இவர்களின் திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதே போல் சமந்தா, தன்னுடைய திருமண புடவை, நகை, தாலி, என அனைத்திலும் நாக சைதன்யா மீது எந்த அளவு காதல் உள்ளது என்பதை அவரின் பெயரை அச்சிட்டு வெளிப்படுத்தினார்.
 

திருமணத்திற்கு பின்னர் திரையுலகமே மெச்சும் நட்சத்திர ஜோடியாக இருந்த இவர்கள்... கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்துக்கு பின்னர் நாக சைதன்யா அவரின் பணிகளில் கவனம் செலுத்த, சமந்தாவும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அதே நேரம் சமந்தா மயோசிட்டிஸ் பிரச்னையாலும் அவதி படநேர்ந்தது. சமந்தா மருத்துவமனையில் தன்னுடைய கடுமையான நாட்களை கழித்தபோது, நாக சைதன்யா அவரை பார்க்க வந்ததாக சில தகவல்கள் பரவ பின்னர் அது வதந்தி என தெரியவந்தது.

டீப் நெக் உடையில்... தங்கம் போல் மின்னும் ராஷ்மிகா! பெண்ணை... தேவதையா.. என கன்ஃபியூஸ் ஆகும் ரசிகர்கள்!
 

Tap to resize

Naga Chaitanya-Sobhita Dhulipala

சமந்தாவை பிரிந்த ஒரே வருடத்தில், நடிகை சோபிதாவை காதலிக்க துவங்கிய நாக சைதன்யா அவருடன் ரகசியமாக டேட்டிங்கிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை நாக சைதன்யா மற்றும் சோபிதாவுக்கு மிகவும் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. நாகர்ஜூனாவின் வீட்டில் நடந்த இந்த விசேஷயத்தில் இரு வீட்டை சேர்ந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
 

இது குறித்த புகைப்படம் வெளியாக வைரலாகி வந்த நிலையில், தற்போது சமந்தா இதயம் நொறுங்குவது போல் தன்னுடைய இன்சாட்கிராமில் போட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது. 

Unseen புகைப்படங்களை வெளியிட்டு கணவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய நஸ்ரியா! வைரலாகும் போட்டோஸ்!
 

இதயம் நொறுங்கும் எமோஜியுடன்,  மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் எதிர்பாராதவிதமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடந்து, வேதனையுடன் இனி என்னால் போராட முடியாது என கூறி தனது ஓய்வை அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிவிப்பில் வினேஷ் போகத் தனது தாயாருக்கு உணர்ச்சிகரமான செய்தி ஒன்றை எழுதி ருந்தார். வினேஷ் போகட் எழுதிய அந்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட சமந்தா, தனது வலியை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த இதயம் உடைக்கும் ஈமோஜியைப் பகிர்ந்து கொண்டார். ஆனால் இன்று நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தத்தின் பின்னணியில், அவர் பகிர்ந்த ஹார்ட் ப்ரேக் சின்னம் ஓரளவுக்கு சின்க் ஆகிவிட்டதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
 

Latest Videos

click me!