சோபிதா துலிபாலாவை விட 20 மடங்கு அதிக சொத்துக்கு அதிபதியாக இருக்கும் நாக சைதன்யா! இருவரின் Net Worth இதோ

First Published | Aug 9, 2024, 8:46 AM IST

நாக சைதன்யாவின் காதலியும் அவரின் வருங்கால மனைவியுமான நடிகை சோபிதா துலிபாலாவின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Sobhita Dhulipala, Naga Chaitanya

சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமண நிச்சயதார்த்தம் தான் தற்போது டோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. அவர் கடந்த சில ஆண்டுகளாக நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நிலையில், நேற்று குடும்பத்தினர் முன்னிலையில் அந்த ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மகனின் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டு மருமகளையும் அறிமுகப்படுத்தினார் நாகார்ஜுனா.

Sobhita Dhulipala, Naga Chaitanya Engagement

நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதா துலிபாலா பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார். தமிழில் மணிரத்னம் இயக்கிய சரித்திர திரைப்படமான பொன்னியின் செல்வனில் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக வானதி என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் சோபிதா. பொன்னியின் செல்வன் படத்துக்கு பின் பாலிவுட்டுக்கு பறந்த அவர் அங்கு தி நைட் மேனேஜர் என்கிற வெப் தொடரில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்... சமந்தாவை பிரிந்த அடுத்த ஆண்டே.. நாக சைதன்யா சோபிதாவின் காதல் கதை எப்படி தொடங்கியது தெரியுமா?

Tap to resize

Sobhita Dhulipala

பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட்டுக்கு சென்ற சோபிதா, மங்கி மேன் என்கிற ஆங்கில படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதுதவிர தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்திருந்தார் சோபிதா. கடந்த 2022-ம் ஆண்டு மேஜர் படத்தின் புரமோஷனுக்காக ஐதராபாத் வந்திருந்த சோபிதா, அங்கு தனது பிறந்தநாளுக்காக பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் நாக சைதன்யாவும் கலந்துகொண்டார்.

Sobhita Dhulipala Net Worth

அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது காதலாகவும் மாறியது. அந்த காதல் விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளது. இந்நிலையில், நடிகை சோபிதாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அவரின் சொத்து மதிப்பு வெறும் ரூ.7 முதல் ரூ.10 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அவரின் காதலன் நாக சைதன்யா ரூ.150 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார். சோபிதா உடன் ஒப்பிடுகையில் 20 மடங்கு அதிக சொத்துக்கு சொந்தக்காரராக நாக சைதன்யா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நாக சைதன்யா - ஷோபிதா நிச்சயதார்த்த நாளில்... சமந்தாவின் இதயம் நொறுங்கும் இமோஜியுடன் போட்ட பதிவு!

Latest Videos

click me!