பீரியட்ஸ் டைம்ல வலியால் துடித்தேன்; உறவினர்களே ஆள் வச்சு அடிச்சாங்க - சத்யராஜ் மகள் திவ்யா சொன்ன பகீர் சம்பவம்

Published : Aug 09, 2024, 10:39 AM IST

கோயம்புத்தூருக்கு சென்றபோது உறவினர்கள் தன்னை ஆள் வைத்து அடித்த சம்பவம் பற்றி நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா கூறி இருக்கிறார்.

PREV
15
பீரியட்ஸ் டைம்ல வலியால் துடித்தேன்; உறவினர்களே ஆள் வச்சு அடிச்சாங்க - சத்யராஜ் மகள் திவ்யா சொன்ன பகீர் சம்பவம்
Sathyaraj Daughter Divya

நடிகர் சத்யாராஜுக்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். இதில் சிபிராஜ், தன் தந்தை போலவே சினிமாவில் நடித்து வருகிறார். மறுபுறம் சத்யராஜின் மகள் திவ்யா, சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருக்கிறார். இவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். இதுதவிர மகிழ்மதி என்கிற இயக்கம் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார் திவ்யா சத்யராஜ். இவர் விரைவில் அரசியலிலும் குதிக்க உள்ளாராம்.

25
divya sathyaraj

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பாஜக தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் அதை தான் நிராகரித்துவிட்டதாகவும் திவ்யா கூறி இருந்தார். மேலும் விரைவில் அரசியலில் நுழைவேன் என்பதையும் உறுதிபட கூறி இருந்தார் திவ்யா. இந்த நிலையில், சத்யராஜ் மகள் திவ்யா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கோவையில் தனக்கு நடந்த பகீர் சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

35
Nutritionist divya sathyaraj

அதில் அவர் கூறியிருப்பதாவது : என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் எனது உறவினர்களே ஆள் வைத்து அடித்ததால் கோயம்புத்தூர்னாலே எனக்கு பயமாக இருக்கும். ஒருநாள் என்னை அடிக்க காசு கொடுத்து அடியாட்களை அனுப்பினர். அந்த சமயத்தில் எனக்கு மாதவிடாய் வந்திருந்து ரத்தப்போக்கும் அதிகமாக இருந்தது. இந்த பதற்றத்தில் என்னுடைய போனையும் மிஸ் பண்ணிவிட்டேன். எப்படியோ அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்துவிட்டேன்.

இதையும் படியுங்கள்... படப்பிடிப்பில் அழுத போது நாகார்ஜுனா செய்த உருக்கமான செயல்.. நெகிழ்ந்து போன அமலா.. க்யூட் லவ் ஸ்டோரி..

45
divya sathyaraj insta post

வந்த பின்பும் அந்த சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அப்பாவுக்கு விஷயம் தெரிந்து கடும் கோபமடைந்தார். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் ஆண்கள் எனக்காக சண்டையிடுவதை நான் விரும்பமாட்டேன். நானே அதை எதிர்கொள்வேன். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் மற்றும் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்டதை ஒப்பிடுகையில் எனக்கு நடந்தது ஒன்றுமே இல்லை என்பதை நான் அறிவேன்.

55
divya sathyaraj shares shocking incident

ஆணவக் கொலைக்காகவும், காதலர்களை பிரிப்பதற்காகவும், பெண்களை இழிவுபடுத்தவும் மதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நான் கடுமையாக தாக்கப்பட்டாலும் பரவாயில்லை, இதுபோன்ற மதங்களுக்கு எதிராகவும், சமூகத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்தும் குரல் கொடுப்பேன். வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல. எனக்குள் இருக்கும் காயங்கள் இன்னும் ஆறவில்லை. இருந்தாலும் அன்புடனும், மனதில் தைரியத்துடனும் கோவைக்கு தொடர்ந்து செல்வேன். வலியான பெண்கள் அன்பு செலுத்துவதை நிறுத்த மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார் திவ்யா. அவரின் இந்த பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... அம்பானி மகன் திருமணத்திற்கு அட்லீ மனைவி அணிந்து வந்த ஆடை இவ்வளவு காஸ்ட்லியானதா? விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

Read more Photos on
click me!

Recommended Stories