MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃபேஷன்
  • அம்பானி மகன் திருமணத்திற்கு அட்லீ மனைவி அணிந்து வந்த ஆடை இவ்வளவு காஸ்ட்லியானதா? விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

அம்பானி மகன் திருமணத்திற்கு அட்லீ மனைவி அணிந்து வந்த ஆடை இவ்வளவு காஸ்ட்லியானதா? விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

அம்பானியின் மகன் ஆனந்தின் திருமணம் கடந்த மாதம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அதில் அட்லீ மனைவி அணிந்து வந்த ஆடை பற்றிய ஆச்சர்ய தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 09 2024, 09:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
atlee, priya

atlee, priya

அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்த ஜூலை 12ந் தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. அம்பானி மகன் திருமணத்தில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அம்பானி மகன் திருமணத்தில் கலந்துகொண்டு ஆட்டம்போடும் அளவுக்கு அமர்க்களமாக நடந்து முடிந்தது ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் ஜோடியின் திருமணம்.

24
Priya atlee at anant ambani wedding

Priya atlee at anant ambani wedding

அம்பானி மகன் திருமணத்தில் மற்றுமொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் அதில் ஒளிபரப்பட்ட குறும்படம் தான். ஆனந்த் அம்பானி பற்றிய இந்த குறும்படத்தை இயக்கியது வேறுயாருமில்லை இயக்குனர் அட்லீ தான். மேலும் இந்த குறும்படத்திற்கு அமிதாப் பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார். அம்பானியே விரும்பும் இயக்குனராக மாறியுள்ள அட்லீ, ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்விலும் முதல் ஆளாக ஆஜரானார்.

இதையும் படியுங்கள்... சோபிதா துலிபாலாவை விட 20 மடங்கு அதிக சொத்துக்கு அதிபதியாக இருக்கும் நாக சைதன்யா! இருவரின் Net Worth இதோ

34
Atlee wife Priya

Atlee wife Priya

அட்லீ உடன் அவரது மனைவி பிரியாவும் வந்திருந்தார். ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு பிரியா அட்லீ அணிந்து வந்திருந்த ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக அந்த ஆடையில் ஆனந்தின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார் பிரியா. ஆனந்த் மீதுள்ள நட்பை இதன்மூலமாக பிரியா வெளிப்படுத்தி இருந்தாலும், அதை இணையவாசிகள் விமசித்ததையும் பார்க்க முடிந்தது.

44
Priya Atlee Dress Cost

Priya Atlee Dress Cost

இந்த நிலையில், அம்பானி மகன் திருமணத்திற்கு பிரியா அட்லீ அணிந்து வந்த ஆடையில் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆனந்த் அம்பானி திருமணத்திற்காக பிரத்யேகமாக வடிமைக்கப்பட்ட அந்த ஸ்டைலிஷ் ஆடையின் விலை ரூ.3 லட்சம் இருக்குமாம். இதை அறிந்த நெட்டிசன்கள் இவ்வளவு காஸ்ட்லியான ஆடையிலா பிரியா அட்லீ வந்தார் என வாயடைத்துப் போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... இரண்டே வாரத்தில் குளோஸ் ஆன தனுஷின் ஆட்டம்.. தியேட்டரில் இருந்து ஓடிடிக்கு தாவிய ராயன் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அட்லீ

Latest Videos
Recommended Stories
Recommended image1
Men's Fashion Tips : ஆண்கள் 'இப்படி' ட்ரெஸ் பண்ணா... எந்த பொண்ணா இருந்தாலும் மயங்கிடுவாங்க!!
Recommended image2
Fashion Tips : உங்க சரும நிறத்திற்கு ஏத்த ஆடைகள் எதுனு தெரியுமா? இப்படி 'ட்ரெஸ்' பண்ணா தாழ்வு மனப்பான்மையே வராது!
Recommended image3
Beauty tips: முகம் ரொம்ப வறண்டு, டல் ஆ இருக்கா? 2 ஸ்பூன் பச்சை பால் போதும்..பளிச்சுனு ஆக்கிடலாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved