நதியா முதல்... சாய் பல்லவி வரை... கவர்ச்சி காட்டாமல் திரையுலகில் திறமையால் ஜெயித்த 9 நடிகைகள்!
தமிழ் சினிமாவில் மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், கவர்ச்சி காட்டி முகம் சுழிக்க வைக்காத நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Nadiya
மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுமாகி, 80-களில் தமிழ் சினிமாவை அலங்கரித்த நடிகைகளில் ஒருவர் நதியா. 'பூவே பூச்சூடவா' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவருக்கு... இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான 'ஃபிலிம் ஃபார் விருது கிடைத்தது. மேலும் ராசியான ஹீரோயினாக பார்க்கப்பட்ட இவர் அடுத்தடுத்து ரஜினிகாந்த், மோகன், ராம்கி, கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். துளியும் கவர்ச்சி காட்டாமல் திரையுலகில் ஜெயித்த நடிகைகளில் நதியாவும் ஒருவர்.
Sangita
1978 ஆம் ஆண்டு மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, இதய வாசல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினுக்கு நிகரான வேடத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சங்கீதா. இவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த 'பூவே உனக்காக' திரைப்படம் தற்போது வரை பல ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வரும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படம் விஜய்க்கு மட்டும் இன்றி, சங்கீதாவுக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. தமிழை தவிர மலையாளம், தெலுங்கு, போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ள இவர், பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தையே தேர்வு செய்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.
நடிகர் சூர்யாவுக்கு படப்பிடிப்பில் மண்டை உடைந்தது! வெளியான அதிர்ச்சி தகவல்!
Suvalaxmi:
90களில் பெங்காலி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் கல்கத்தாவை சேர்ந்த நடிகை சுவலட்சுமி. தமிழில் அஜித்துக்கு ஜோடியாக 'ஆசை' திரைப்படத்தில் நடித்து, முதல் படத்திலேயே பல இளம் ரசிகர்களின் இதயங்களை திருடினார். மேலும் ஆசை படத்திற்காக சிறந்த நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதையும் பெற்றார். 40-க்கும் குறைவான படங்களிலேயே சுவலட்சுமி நடித்திருந்தாலும் அதில் பெரும்பாலான படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன. கமல் - ரஜினி போன்ற நடிகர்களின் படங்களில் கூட நடிக்க முடியாது என கூறிய சுவலட்சுமி சூலம் என்கிற சீரியலில் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் வெளிநாட்டை சேர்ந்த மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
Suhasini
உலக நாயகனின் அண்ணன் மகளான சுஹாசினி தன்னுடைய இளம் வயதிலேயே நடிக்க துவங்கியவர். ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும், துளியும் கவர்ச்சி காட்டாத நடிகை என பெயர் எடுத்தவர். நடிகையாக மட்டும் இன்றி, திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என பன்முக திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை சுகாசினி.
உனக்கென்ன அங்க வேலை..! திரிஷாவை கண்டபடி திட்டினாரா விஜய்யின் அம்மா ஷோபா? கொளுத்தி போட்ட பயில்வான்!
Anu Haasan
சுகாசினியை போலவே அவருடைய சகோதரி அனு ஹாசனும், கவர்ச்சி காட்டாத நடிகை என பெயர் எடுத்தவர். சுஹாசினி இயக்கிய இந்திரா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர்,இந்த படத்தை தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்த போதும் அதில் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், ஆலவந்தான், நல தமயந்தி, சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்திலேயே நடித்துள்ளார்.
Revathy:
தமிழ் சினிமாவை பொறுத்தமட்டில், திரை உலகில் கவர்ச்சி காட்டாத நடிகை என கூறியதும்... அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது நடிகை ரேவதியின் முகம் தான், மண்வாசனை திரைப்படத்தில் துவங்கி, ரஜினி, கமல், சத்யராஜ், மோகன், என பல டாப் ஹீரோக்களுடன் ஏகப்பட்ட வேடங்களில் நடித்திருந்தாலும், இதுவரை இவர் முகம் சுழிக்கும் வகையில் உடைகளை கூட அணியாத நடிகை என பெயர் எடுத்தவர்.
Devayani
நடிகை தேவயானி தமிழில் ஹீரோயின் ஆக அறிமுகமான தன்னுடைய முதல் படமான 'தொட்டா சிணுங்கி' படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தாலும், இந்த படத்தை தொடர்ந்து அவர் அஜித், விஜய், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த போதிலும், துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்தவர்.
Shalini Ajith
குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலமானவர் நடிகை ஷாலினி, தளபதி விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். இந்த படத்தை தொடந்து அஜித்துடன் அமர்க்களம், மாதவனுக்கு ஜோடியாக அலைபாயுதே, மற்றும் பிரஷாந்துடன் பிரியாத வரம் வேண்டும் என எண்ணி நான்கே தமிழ் படத்தில் நடித்திருந்தாலும் ஒரு படத்தில் கூட கவர்ச்சி காட்டவில்லை. அதே போல் இவர் நடித்த அணைத்து படங்களுமே ஹிட்டாகின. நடிகர் அஜித்தை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன ஷாலினி மொத்தமாக சினிமாவை விட்டு விலகினார்.
படப்பிடிப்பில் அழுத அமலா.. நாகார்ஜுனா செய்த உருக்கமான செயலால் உருகிய இதயம்.. க்யூட் லவ் ஸ்டோரி..
Sai Pallavi
நடிகை சாய் பல்லவி, தென்னிந்திய திரையுலகில் இப்போது இருக்கும் இளம் நடிகைகளில் ஒருவர். அதே போல் கவர்ச்சி காட்டினாள் தான் திரையுலகில் இந்த காலத்தில் தாக்கு பிடிக்க முடியும் என சில நடிகைகள் நம்பும் நிலையில், துளியும் கவர்ச்சி காட்டாமல் பல ஹிட் படங்களை கொடுத்து அசர வைத்து வருகிறார்.