நடிகை நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து, கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்த படத்தை நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்திருந்த நிலையில், இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.
24
Mookuthi Amman Get Good Response:
விறுவிறுப்பான கதைகளத்துடன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான கதையுடன் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஜே பாலாஜி 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'மாசாணி அம்மன்' என்கிற படத்தை இயக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்க உள்ளார்.
44
sunder c
எனினும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை தரமான இயக்குனரை வைத்து இயக்க வேண்டும் என்பதில் வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் உறுதியாக இருந்த நிலையில் தற்போது, திகில் படங்களுக்கு பெயர் போன இயக்குனரை வைத்து தான் இந்த படத்தை இயக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முடிவு செய்துள்ளாராம். அதன்படி மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க உள்ளார். இதில் நடிகை நயன்தாராவே அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரபலங்களின் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்தப்பட குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.