தளபதி விஜய்யிடம் அவரது மாமனார் பழைய பிரச்னையை தூசி தட்டி சமரசம் செய்ய பேச்சு வார்த்தை நடக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தந்தை - மகனுக்கு இடையே இப்படி ஒரு திடீர் பிளவு ஏற்பட காரணம், விஜய்க்கு துளியும் இஷ்டம் இல்லாத செயல்களை தன் பெயரை பயன்படுத்தி அவரது தந்தை செய்தது தான். இது வழக்கு தொடரும் அளவில் கூட சென்றது. என்ன தான் தந்தையிடம் கடுமையாக விஜய் நடந்து கொண்டாலும் அம்மா மீதுள்ள அன்பு எப்போதும் மாறியது இல்லை.
இந்நிலையில் அப்பா - மகன் இடையே உள்ள கருத்து வேறுபாடை பேசி தீர்ப்பதற்கான பஞ்சாயத்து தான் லண்டனில் உள்ள விஜய்யின் மாமனார் வீட்டில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் அம்மா, கேட்டுக்கொண்டதற்காக இதற்க்கு விஜய்யின் மாமனாரும் ஒப்புக்கொண்டுள்ளாராம்.