Published : Oct 17, 2022, 10:27 PM ISTUpdated : Oct 17, 2022, 10:49 PM IST
கே.ஜி.எப் படத்தை தொடர்ந்து, ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது சமீபத்தில் வெளியான 'காந்தாரா' திரைப்படம். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சியமான நடிகர் மற்றும் இயக்குனராக மாறியுள்ளார் ரிஷப் ஷெட்டி.
கன்னடத்தில் பல படங்களில் நடித்தும், சில படங்களை இயக்கியும் இருக்கிறார், இவர். 39 வயதான ரிஷப் ஷெட்டி எம்.பி.ஏ படித்தவர். ஃபிலிம் டைரக்ஷ்னில் டிப்ளமோ வாங்கி இருக்கிறார்.
25
2012-ல் சிறிய வேடத்தில் 'துக்ளக்' படத்தில் நடித்து, நடிகராக அறிமுகம் ஆனார். ' யக்ஷ்சகானா ' என்ற கர்நாடக , Traditional dance folk-ல் நன்கு பயிற்சி பெற்றவர். இவர் நடித்து 2019-ல் வெளிவந்த ' பெல் பாட்டம் ' படம் சூப்பர் ஹிட்.
ரிஷப் ஷெட்டியின் உண்மை பெயர் பிரஷாந்த் ஷெட்டி. இவருடைய தந்தை பாஸ்கர் ஷெட்டி ஒரு புகழ் பெற்ற ஜோசியர். அவர்தான் ரிஷப் ஷெட்டி என்று பெயர் மாற்றம் செய்தார். அதிலிருந்து அதிர்ஷ்டம் அடித்தது ரிஷப் ஷெட்டிக்கு.
45
இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த ஆண்டு தான் இவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இவருக்கு பிடித்த நடிகை திவ்யா ஸ்பந்தனாவாம். அதாவது தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான ' குத்து 'ரம்யாதான் அவர்.
இவருடைய மனைவி பிரகதிக்கு முதல் பரிசாக கம்மல் வாங்கி கொடுத்துள்ளார். கணவருக்கு பிரகதி அளித்த முதல் பரிசு என்ன தெரியுமா OLD MONK RUM...? இதை கேட்ட பல நெட்டிடங்கள் இது போல் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என புலம்பி வருகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.